Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 2 செப்டம்பர், 2021

சியோமி அதிரடி அறிவிப்பு.. தலைதூக்கும் சீன டெக் நிறுவனங்கள்.. என்ன நடக்குது..!

 சியோமி EV இன்க்

அமெரிக்காவில் எப்படி எலக்ட்ரிக் வாகனங்களுக்கான புரட்சி வெடித்ததோ அதேபோல் சீனாவிலும் டெக் நிறுவனங்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான புரட்சி வெடித்துள்ளது.

பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தான் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க முற்படும், ஆனால் சீனாவில் டெக் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறது.

எலக்ட்ரிக் கார் துறையில் டெக் ஆதிக்கம்

இதற்கு முக்கியக் காரணம் எலக்ட்ரிக் வாகனங்கள் இன்றளவில் அதிகளவிலான டெக் சேவைகளைக் கொண்டு இயங்கி வருகிறது, இதை ஆட்டோமொபைல் நிறுவனத்தால் வெற்றிகரமாகச் செய்ய முடியாது, உதாரணமாகத் தானியங்கி கார் சேவை இது அனைவருக்கும் தேவையில்லை என்றாலும் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் இது தான் என்பதால் டெக் நிறுவனங்களின் தேவை அதிகமாக உள்ளது.

சியோமி

இந்த நிலையை உணர்ந்து தான் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சியோமி தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப் புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.

சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

சீனாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உடனான கூட்டணி மிகவும் எளிதான ஒன்று குறிப்பாகப் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் சீன அரசின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் எவ்விதமான தங்குதடையுமின்றிக் கூட்டணி சாத்தியமாக்க முடியும்.

சியோமி EV இன்க்

இதனை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் சியோமி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான லேய் ஜூன் எலக்ட்ரிக் வாகன பிரிவின் வர்த்தகத்தில் இறங்குவதற்காகப் புதிதாகச் சியோமி EV இன்க் என்ற பெயரில் ஒரு கார் நிறுவனத்தைத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஹூவாய் நிறுவனம்

இந்தப் புதிய சியோமி EV இன்க் நிறுவனம் சியோமி நிறுவனத்தின் கிளை நிறுவனமாக விளங்கும். சியோமி நிறுவனத்தைப் போலவே ஹூவாய் நிறுவனமும் எலக்ட்ரிக் வாகன பிரிவில் இறங்கப் பல முயற்சிகள் செய்து வந்த நிலையில், சியோமி முந்திக்கொண்டு உள்ளது.

சியோமி முந்திக்கொண்டது

2020 இறுதியில் இருந்து சியோமி மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு சார்ந்த டெக் ஊழியர்களை அதிகளவில் பயணியில் அமர்த்தி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை, இந்த நிலையில் தான் மார்ச் மாதம் சியோமி அதிகாரப்பூர்வாக எலக்ட்ரிக் வாகன பிரிவில் இறங்க உள்ளதாக அறிவித்துத் தற்போது இப்பிரிவுக்காகப் பிரத்தியேகமாக நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளது.

10 பில்லியன் டாலர் முதலீடு

லேய் ஜூன் தலைமையிலான சியோமி நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய சியோமி EV இன்க் நிறுவனத்தை முதல்கட்டமாக 10 பில்லியன் யுவான் அளவிலான முதலீட்டில் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த 10 வருடத்தில் எலக்ட்ரிக் வாகன பிரிவில் மட்டும் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது சியோமி நிர்வாகம்.

லேய் ஜூன்-க்கு தலைவர் பதவி

சியோமி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் லேய் ஜூன் தான் சியோமி EV இன்க் நிறுவனத்திற்கும் தலைவராக இருப்பார். இந்த முடிவைப் பங்குதாரர்கள் மத்தியில் நீண்ட காலம் ஆலோசனை செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டதாகவும், தன்னுடைய பெயருக்கும் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லாத வகையில் கடுமையாக உழைப்பேன் என லேய் ஜூன் தெரிவித்துள்ளார்.

DeepMotion நிறுவனம்

சியோமி தனது முதல் காரை எப்போது வெளியிடபோகிறது என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை, ஆனால் கடந்த வாரம் சியோமி தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் டீப்மோஷன் (DeepMotion) என்னும் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தைக் கைப்பற்றியது மூலம் டெஸ்லா-வை போல் சியோமி நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களிலும் தானியங்கி கார் சேவை இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. சியோமி EV இன்க் நிறுவனத்தில் மட்டும் தற்போது 500 நிபுணர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

சியோமி ஆதிக்கம்

எலக்ட்ரிக் வாகன பிரிவில் சியோமி வருவதன் மூலம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்பட்ட விலை போர் எலக்ட்ரிக் வாகன பிரிவிலும் உருவாகும். இதனால் டெஸ்லா மட்டும் அல்லாமல் போர்டு, டாடா, ஹுண்டாய் என EV பிரிவில் இருக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் மிகப்பெரிய வர்த்தக நெருக்கடியை எதிர்கொள்ளும்.

சியோமி வர்த்தக மாடல்

இதேபோல் சியோமி-யின் வர்த்தக மாடல் மிகவும் கடுமையானது, லாபத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பெற வேண்டும் என்ற இலக்குடன் நகரும் ஒரு கூட்டமைப்பு என்பதால் EV பிரிவில் இருக்கும் சியோமி கடும் போட்டியாளராக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

நியோ நிறுவனம்

சீனாவில் ஏற்கனவே NIO என்ற எலக்ட்ரிக் கார் நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் பட்ஜெட் கார் தயாரிப்புகள் சீனா மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வருகிறது. எலக்ட்ரிக் கார் பிரிவில் தற்போது உலகளவில் வேகமாக வளரும் நாடாகச் சீனா இருக்கும் நிலையில், டெக் நிறுவனங்களின் பெரும் புரட்சி வெடிக்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக