பிஎஸ்என்எல்
நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம்
உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு
திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.அதேபோல் மற்ற நிறுவனங்களை விட மலிவான விலையில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல்
நிறுவனம்.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை கொண்டுவந்தால் இன்னும் அருமையாக
இருக்கும். மற்ற தனியார் நிறுவனங்கள்5ஜி சோதனையை தொடங்கிவிட்டன என்பது
குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் பயனர்களை Plan99-இலிருந்து Plan199-க்கு-க்கு இடம்பெயர செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பயனர்களுக்கு ஒரு இது சம்பந்தமாக எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும், பின்பு இந்த மாற்றம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று பயனர்களை அலெர்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த தகவலை telecomtalkவலைத்தளம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வரம்பற்ற அழைப்புகள், 25ஜிபி டேட்டா, தினசரி 100 SMS போன்ற நன்மைகளை Plan199 உடன் அனுபவிக்கவும் என்று அந்த எஸ்எம்எஸ் வெளிவந்ததாக கூறப்படுகிறது. மேலும் Plan99 நிறுத்தப்பட்டது மற்றும் 1 செப்டம்பர் 2021 அன்று நீங்கள் Plan199-க்கு இடம்பெயர்ந்தீர்கள் என்ற தகவலும் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.99 திட்டத்தை நிறுத்தியதின் விளைவாக தற்போதைக்கு பயனர்கள் ரூ.199 திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். ஒருவேளை ஏற்கனவே ரூ.99 திட்டத்தில் வேலிடிட்டி இன்னும் தீராத பயனர்களிடம் பிஎஸ்என்எல் நிறுவனம் கூடுதல் பணம் வசூலிப்பது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.99 திட்டத்தின் வேலிடிட்டி முடிந்த பிறகு, பயனர்கள் ரூ.199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் இந்த நிறுவனத்தின் வேறு ஒரு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ரூ.99 திட்டம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறவனம் வழங்கும் ரூ.199 திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள், 25ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.
பிஎஸ்என்எல் ரூ.18 ப்ரீபெய்ட திட்டம்
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.18 ப்ரீபெய்ட திட்டம் ஆனது 48 மணி வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. குறிப்பாக வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற வீடியோ அழைப்பு வசதியை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 1ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.201 ப்ரீபெய்ட திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.201 திட்டம் ஆனது 90 நாட்கள் செல்லுபடியாகும். இந்த செல்லுபடியாகும் காலத்திற்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 300 நிமிட அழைப்பு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு 6 ஜிபி டேட்டா மற்றும் 99 இலவச எஸ்எம்எஸ் வசதிகளை வழங்குகிறது. அழைப்பு நன்மைகளை மட்டும் விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டம் ஆகும்.
பிஎஸ்என்எல் ரூ.139 ப்ரீபெய்ட திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.139 ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் பயனர்கள் 2 ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள். இது 80 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் தினசரி 100 எஸ்எம்எஸ்களை பெறுவார்கள். அதேபோல் ரூ.139 திட்டம் டெல்லி மற்றும் மும்பை உட்பட அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில் பிஎஸ்என்எல் ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். இந்த திட்டமானது தற்போது அசாம், குஜராத்,உபி கிழக்கு மற்றும் உபி மேற்கு, கொல்கத்தா, தெலுங்கான மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான பல வட்டங்களில் கிடைக்கிறது. நீண்ட காலத்திற்கு டேட்டாவை பயன்படுத்த விரும்பும் மக்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. ஆனால் இந்த திட்டம் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் டேட்டா பேக் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக