பாதுகாப்பு
முறை மற்றும் சூப்பர் ஃபாலோஸ் உள்ளிட்ட இரண்டு புதிய அம்சங்களை டுவிட்டர்
அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு முறையானது தற்காலிக அடிப்படையில்
தீங்கு விளைவிக்கும் கணக்கை தடுக்க அனுமதிக்கிறது. சூப்பர் ஃபாலோஸ் முறை
என்பது சந்தா அடிப்படையிலான தொகுதியை பயன்படுத்தி மாதாந்திர வருவாயை
உருவாக்க கிரயேட்டரை அனுமதிக்கிறது.சூப்பர் ஃபாலோஸ் மற்றும் பாதுகாப்பு முறை
டுவிட்டர் தனது தளத்தில் சூப்பர் ஃபாலோஸ் (Super Follows) மற்றும் பாதுகாப்பு முறை (Safety Mode) என்ற இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சூப்பர் ஃபாலோஸ் என்ற பயன்முறை
சூப்பர் ஃபாலோஸ் என்ற பயன்முறை ஆனது டுவிட்டரில் படைப்பாளர்கள் அவர்களின் பதிப்புக்கு சந்தா அடிப்படையில் மாதாந்திர வருமானத்தை உருவாக்க அனுமதிக்கிறது. அடுத்த பயன்முறை அம்சம் குறித்து பார்க்கையில், இந்த பாதுகாப்பு அம்சமானது வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தீங்கு விளைவிக்கும் குறிப்பிட்ட கணக்குகளை தடுக்க மக்களை அனுமதிக்கிறது.
பின்தொடர்பவர்கள் மூலம் மாதாந்திர வருமானம்
சந்தாதாரர்கள் வழங்கப்படும் சூப்பர் ஃபாலோஸ் பயன்முறையானது பயனர்களை மாதாந்திர வருவாயை ஈட்ட அனுமதிக்கிறது. சூப்பர் ஃபாலோஸ் என்ற பெயருக்கு ஏற்ப பின்தொடர்பவர்கள் மூலம் மாதாந்திர வருமானத்தை ஈட்ட இது அனுமதிக்கிறது. மேலும் இந்த சூப்பர் ஃபாலோஸ் பயன்முறை மூலம் டுவிட்டரில் கூடுதல் பயன்பாட்டை உருவாக்க அனுமதிக்கிறது.
சந்தா தொகை செலுத்த வேண்டும்
சூப்பர் ஃபாலோஸ் பயன்முறைக்கு பயனர்கள் சந்தா தொகை செலுத்த வேண்டும். இந்த தொகை விவரம் குறித்து பார்க்கையில், இதன் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.218, ரூ.499, ரூ.729 ஆக இருக்கிறது. சூப்பர் ஃபாலோயர்ஸ் அணுகுவதன் மூலம் கிரியேட்டர்கள் தங்களது சூப்பர் ஃபாலோயர்களை கண்டறி்நது தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கிறது. அதேபோல் இந்த பேட்ஸ்கள் மூலம் படைப்பாளர்களின் டுவிட்டுக்கு பதிலளிக்கும் போதெல்லாம் அவர்கள் தங்களது சூப்பர் ஃபாலோவர்ஸ் பெயரை முன்னிலைப்படுத்த முடியும்.
சூப்பர் ஃபாலோவர்களை தேர்ந்தெடுத்து இணையலாம்
சூப்பர் ஃபாலோவர்கள் சந்தாவில் இணைய பயனர்கள் காத்திருப்பு பட்டியலில் இணைய தற்போது விண்ணப்பிக்கலாம் என டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களின் முகப்பு பக்கத்தை திறந்து சூப்பர் ஃபாலோவர்களை தேர்ந்தெடுத்து இணையலாம். அடுத்த சில வாரங்களில் உலகளவில் ஐஓஎஸ்-ஐ பயன்படுத்தும் மக்களுக்கு இந்த அம்சம் வெளிவரும் என டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முறை (Safety Mode)
பாதுகாப்பு முறை என்பது அனைத்து தளங்களிலும் அவசியமானதாகும். பாதுகாப்பு முறை ஆனது இடையூறு விளைவிக்கும் நோக்கங்களை குறைப்பதே ஆகும். டுவிட்டர் பயன்பாட்டில் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் டுவிட்டர்.காம்-ல் இந்த அம்சம் சிறிய குழுவுக்கு வெளியிடப்படுகிறது. தற்போது இது ஆங்கில மொழியில் இயக்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.
தீங்கு விளைவிக்கும் கணக்குகள்
அவமதிப்பு, வெறுக்கத்தக்க கருத்துகள், தொடர்ந்து தொந்தரவு விளைவிக்கும் நிகழ்வுகள் போன்ற பல குறிப்புகளை தவிர்க்க இந்த பாதுகாப்பு முறை அம்சம் பயன்படுகிறது. தீங்கு விளைவிக்கும் கணக்குகளை ஏழு நாட்களுக்கு தற்காலிமாக தடுக்க இந்த அம்சம் பயன்படுகிறது. மேலும் டுவிட்களின் பயனர்கள் தீங்கு விளைவிப்பதாக அதன் அமைப்புகள் கண்டறிந்தால் அவர்கள் தாமாகவே தடுக்கப்படுவார்கள் என டுவிட்டர் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிமாக தடுக்கப்பட்ட கணக்குகள்
பாதுகாப்பு முறை மூலம் கொடியிடப்பட்ட டுவிட்கள் குறித்த தகவல்களையும் நீங்கள் காணலாம். எந்த சூழ்நிலையிலும் தற்காலிமாக தடுக்கப்பட்ட கணக்குகளின் விவரங்களை பாதுகாப்பு முறை அம்சத்தை பயன்படுத்தியவர்கள் காணலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பாதுகாப்பு முறை முடிவடையும் ஒவ்வொரு சமயத்திலும் பயனர்களுக்கு இதுகுறித்த தகவல்கள் அனுப்பப்படும். நீட்டிப்புக்கு விரும்பினால் தொடரலாம் அல்லது ரத்தும் செய்து கொள்ளலாம்.
பிரதான ஒன்றாக இருக்கும் டுவிட்டர்
சமூகவலைதள வரிசையில் பிரதான ஒன்றாக இருக்கும் டுவிட்டர், தனது சேவையில் டுவிட்டர் ப்ளூ எனும் புதிய சந்தை முறையை அறிமுகம் செய்ய உள்ளது. டுவிட்டர் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. டுவிட்டரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமானது டுவிட் திருத்தம். ஒரு டுவிட் செய்த பிறகு அதில் இருக்கும் பிழைகளையோ, குற்றங்களையோ திருத்த முடியாத நிலை நீடித்து வந்தது. அதை தற்போது டுவிட்டர் நிறுவனம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
டுவிட் ப்ளூ எனும் அம்சம்
டுவிட்டர் நிறுவனம் தற்போது தனது சேவையில் டுவிட் ப்ளூ எனும் பெயரில் புது சந்தா முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையானது பயனர்கள் பதிவிடப்பட்ட டுவீட்களை திருத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இதில் டுவிட்களை சேமிக்கவும், ஒழுங்கபடுத்தவும் முடியும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக