Itel பிராண்டின் கீழ் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Itel நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் அதிக செலுத்தி வருகிறது, அந்த வரிசையில் இப்போது Itel A26 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் செப்டம்பர் 22 (இன்று) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் விபரங்கள் பற்றி அறிந்துகொள்ள மேலும் தொடர்ந்து பதிவை படியுங்கள்.
Itel A26 ஸ்மார்ட்போன் அறிமுகமா?
இந்த ஸ்மார்ட்போன் பெயரிடப்படாத 1.4GHz குவாட் கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 2 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. புதிய Itel A26 ஸ்மார்ட்போன் யாரும் எதிர்பார்த்திடாத மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சாதனம் நிறுவனத்தின் பட்ஜெட் பிரிவு மாடல்களின் கீழ் வருகிறது. இந்த புதிய Itel A26 ஸ்மார்ட்போன் சாதனம் 5.7' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் IPS டிஸ்ப்ளேவை வாட்டர்ட்ராப் ஸ்டைல் நாட்ச் மூலம் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.
Itel A26 ஸ்மார்ட்போன் விலை என்ன?
புதிய Itel A26 ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 10 (கோ பதிப்பு) மற்றும் ஃபேஸ் அன்லாக் திறன்களுடன் இயங்குகிறது. இது ஒரு சமூக டர்போ அம்சத்துடன் வருகிறது என்பது குறிபிடித்தக்கது. இது பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளை பதிவு செய்ய, நிலைகளைச் சேமிக்க மற்றும் பலவற்றை அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி பார்க்கையில், Itel A26 ஸ்மார்ட்போனுக்கான விலை இந்தியாவில் ரூ. 5,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட்டில் இந்த விலை பிரதிபலிக்க என்ன காரணம்?
இருப்பினும், Itel A26 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் பட்டியலிடப்பட்ட விளம்பரத்தில் ரூ.6,399 என்று பட்டியலிடப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த பதிவை எழுதும் நேரத்தில் பிளிப்கார்ட் தளத்தில் இந்த ரூ. 6,399 விலை காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது பின்னர் நிறுவனத்தின் கவனத்திற்கு வந்த பிறகு சரிசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் டீப் ப்ளூ, கிரேடேஷன் கிரீன் மற்றும் லைட் பர்பில் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
1 ஆண்டு உத்தரவாதத்துடன் 100 நாட்கள் டிஸ்பிளே பாதுகாப்பு
Itel A26 மேலும் 1 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது. இது வாங்கிய 100 நாட்கள் வரை செல்லுபடியாகும் ஒரு முறை திரை மாற்று சலுகையுடன் வழங்கப்படுகிறது. இந்த புதிய Itel A26 ஸ்மார்ட்போன் டூயல் நானோ சிம் விருப்பத்துடன் ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பில் இயங்குகிறது. இது 5.7 இன்ச் எச்டி+ கொண்ட 720 x 1,520 பிக்சல்கள் உடன் கூடிய ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் மற்றும் 19: 9 விகிதத்துடன் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இது பெயரிடப்படாத 1.4GHz சிப்செட்டைப் பெறுகிறது, இது 2GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.
32 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம்
கேமரா அம்சத்தை பற்றிப் பார்க்கையில், இது 5 மெகாபிக்சல் AI சென்சார் மற்றும் VGA சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைப் பெறுகிறது. முன்பக்கத்தில், செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் 32 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 128 ஜிபி வரை விரிவாக்க கூடிய ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, 4G ViLTE, 3G மற்றும் 2G நெட்வொர்க்குகள் அடங்கும்.
Itel A26 ஸ்மார்ட்போன் பேட்டரி அம்சம்
இது ஒரு சமூக டர்போ அம்சத்துடன் வருகிறது. இது பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவுசெய்யவும், நிலைகளைச் சேமிக்கவும், அழைப்பு எச்சரிக்கைகள் மற்றும் பீக் பயன்முறை செயல்பாடுகளுடன் உதவுகிறது. Itel A26 ஸ்மார்ட்போன் 3,020 mAh பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் ஃபேஸ் அன்லாக் திறன்களையும் பெறுகிறது. இது 148x72.3x9.9 மிமீ அளவிடுடன் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக