Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 செப்டம்பர், 2021

இன்னும் 6 படம் மட்டும் ஹீரோவா நடிச்சுக்குறேன்… ராமராஜனுக்கு இப்படி ஒரு ஆசையா?



தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவரான ராமராஜன் இன்னும் 6 படங்கள் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம்.

80
களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.

அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன் குணச்சித்திர வேடங்கள் தனக்கு வந்தாலும் நடிக்க மறுத்து வருகிறாராம். ஏனென்றால் அவர் இதுவரை 44 படங்கள் ஹீரோவாக நடித்து விட்டாராம். இன்னும் 6 படங்கள் கதாநாயகனாக நடித்தால் உலகிலேயே முதல் 50 படங்கள் கதாநாயகனாக நடித்தவர் என்ற சிறப்பை பெறுவோம் என நினைக்கிறாராம். அதற்குப் பின் எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக