இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் சேவைகளின் ஆதிக்கம் மிகவும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அரசு அமைப்புகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் வரையில் டிஜிட்டல் சேவைகளை அறிமுகம் செய்யவும், மேம்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது பேமெண்ட் சேவைகள் தான்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் படி ஜூலை மாதத்தில் இந்தியாவில் யூபிஐ மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட தொகையின் அளவு கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதைவிட முக்கியமானது ஜூலை மாதத்தில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்பட்ட பண பரிமாற்றத்தை விடவும் யூபிஐ மூலம் செய்யப்பட்ட பண பரிமாற்றத்தின் அளவு 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் ஜூலை மாதத்தில் மட்டும் யூபிஐ மூலம் சுமார் 6.06 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு ஜூன் மாதத்தில் 5.47 லட்சம் கோடி ரூபாய் தான் அதிகப்படியான அளவீடாக இருந்தது. இதேபோல் 2020 ஜூலையில் இதன் அளவு 2.91 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஜூலை 2021ல் கார்டு மூலம் செய்யப்பட்ட மொத்த பண பரிமாற்றத்தின் அளவீடு 1.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎப்சி வங்கிஹெச்டிஎப்சி வங்கி மீதான வர்த்தக தடை ரிசர்வ் வங்கி நீக்கியதில் இருந்து கிரெடிட் கார்டு வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. இதன் படி செப்டம்பர் மாதம் மட்டும் ஹெச்டிஎப்சி வங்கி சுமார் 4, 00, 000 கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்து புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
இந்த எண்ணிக்கை ரிசர்வ் வங்கி தடைக்கு முன்பு 3, 00, 000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி தடையை நீக்கிய பின்பு முந்தைய அளவீட்டை விடவும் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்றுள்ளது. மேலும் பிப்ரவரி 2022 முதல் மாதம் 5, 00, 000 கிரெடிட் கார்டுகளை கொடுக்க வேண்டும் என புதிய இலக்கையும் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் ஹெச்டிஎப்சி வங்கி சிட்டிபேங்கி கிரெடிட் கார்டு வர்த்தகத்தை கைப்பற்ற போட்டிப்போட்டு வருகிறது.
மைக்ரோ பைனான்ஸ் இன்ஸ்டியூஷன்ஸ்மத்திய அரசு சமீபத்தில் சிறு கடனாளர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் 7, 500 கோடி ரூபாய் அளவிலான கடன் உத்தரவாதத்தை கொடுத்தது. இதை மைக்ரோ பைனான்ஸ் இன்ஸ்டியூஷன்ஸ் முழுமையாக பயன்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6.29 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஊக்க திட்டத்தை அறிவிக்கும் போது அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக