போக்கோ எக்ஸ்3 ப்ரோ சாதனமானது போக்கோ நிறுவனத்தில் அதிகம் விற்பனையாகும் சாதனங்களில் ஒன்றாகும். போக்கோ நிறுவனம் பல்வேறு விலை பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. மலிவு விலையில் கிடைக்கும் சாதனத்திலும் சிறந்த சக்திவாய்ந்த அம்சங்கள் பேக் செய்யப்படுகிறது. போக்கோ சாதனங்களில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் போக்கோ எக்ஸ்3 சீரிஸ் ஒன்று.
அமோக வரவேற்பு பெற்ற போக்கோ எக்ஸ் 3
போக்கோ எக்ஸ் 3 சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கு அதன் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ சாதனம் சார்ஜ் செய்யப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்து அகற்றப்பட்ட ஐந்து நிமிடங்களிலேயே அவரது போன் வெடித்து சிதறியதாக பயனர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
போக்கோ எக்ஸ் 3 பயனர் பதிவிட்ட பதிவு
டுவிட்டரில் அமன் பரத்வாஜ் (@Ammybhardwaj13) என்ற போக்கோ எக்ஸ் 3 பயனர், தனது சாதனம் வெடிப்புக்கான காரணம் குறித்தும் அந்த புகைப்படம் குறித்தும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். சார்ஜரில் இருந்து ஸ்மார்ட்போன் அகற்றப்பட்ட ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தனது போக்கோ எக்ஸ் 3 ப்ரோ வெடித்ததாக கூறினார். தனது சாதனம் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு அகற்றப்பட்டதாகவும் அடுத்த ஐந்து நிமிடத்தில் வெடித்து சிதறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்த பயனர் தனது டுவிட்டர் பக்கத்தில் போக்கோ எக்ஸ்3 ப்ரோ வெடிப்புக்கு பிறகு இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
கடுமையான சேதம்
புகைப்படத்தில் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ வெடிப்புக்கு பிறகு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பேட்டரி வெடித்த பிறகு ஸ்மார்ட்போன் கருகிய நிலையில் இருக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பிறகு சாதனம் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் கடுமையான சேதம் அடைந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட மொபைல்
மேலும் இந்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த போக்கோ எக்ஸ் 3 ப்ரோ சாதனத்தை வாங்கியதாக குறிப்பிட்டு பில் ரசீதையும் வெளியிட்டுள்ளார். இந்த ரசீதில் போக்கோ போன் ஜூன் 15, 2021 ஆம் தேதி மூன்றாம் தரப்பு சில்லறை விற்பனையாளர்களிடம் வாங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடதகுந்த விஷயம் என்னவென்றால் அதிர்ஷ்டவசமாக சாதனம் வெடிப்பில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தொடரும் போக்கோ சாதனம் வெடிப்பு
போக்கோ சாதனம் வெடிப்பது இது முதல்முறையல்ல. சில தினங்களுக்கு முன்பு இதேபோல் பிரச்சனை எழுந்தது. அதற்கு போக்கோ நிறுவனமும் பதிலளித்தது. இந்த சாதனங்கள் சார்ஜ் செய்யும் போதும், சார்ஜ் செய்யப்பட்டதற்கு பிறகும் வெடித்ததாக கூறப்படுகிறது.
போக்கோ எஃப் 3 ஜிடி வெப்ப சிக்கல்
போக்கோ எஃப் 3 ஜிடி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குறிப்பிட்ட குறைந்த அளவு பயனர்களின் சாதனங்கள் வெப்ப சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை போக்கோ உறுதிப்படுத்தியது. போக்கோ எஃப் 3 ஜிடி வெப்பத்தை தடுக்க எட்டு அடுக்கு கிராஃபைட் மூடியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக