வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய அலிபாபா, மெய்துயன், ஜே.டி.காம் ஆகிய நிறுவனங்கள் ரோபோக்களை அதிகளவில் இயக்கப்பட இருக்கின்றன.
கொரோனா தொற்று காலங்களில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோபோக்கள் மூலம் டெலிவரி செய்ய சீன இ-காமர்ஸ் தளங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் பிரதான இ-காமர்ஸ் தளமாக இருக்கும் ஜே.டி.காம்., கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில், ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படும் தொடர்பை துண்டிக்க டெலிவரிக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது.
நிறுவனங்கள் 2022-க்குள் 2000-க்கும் மேற்பட்ட ரோபோக்களை இயக்க திட்டமிடப்பட்டு இருக்கின்றன. இது தற்போதைய நிலையை விட நான்கு மடங்கு உயர்ந்துள்ளன. தொற்றுநோய் காரணமாக மோசமடைந்துள்ள தொழிலாளர் நெருக்கடிக்கு மத்தியில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.
சீனாவில் பிரதான இ-காமர்ஸ் நிறுவனமாக இருக்கும் ஜே.டி.காம், பொருட்களை டெலிவரி செய்ய ரோபோக்களை அதிகளவில் பயன்படுத்த இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அதன் போட்டி நிறுவனங்களாக இருக்கும் அலிபாபா, மெய்துன் உள்ளிட்டவைகளும் இதுபோன்ற ரோபோக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கின்றன. முன்னதாகவே 200 ரோபோக்களை டெலிவரி சேவைக்கு பயன்படுத்தப்படும் நிலையில், ஜே.டிகாம் இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 ரோபோக்களை களமிறக்க திட்டமிட்டு இருக்கிறது.
JD.com தனது ரோபோ சேவையைத் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வாகனங்கள் மக்களை மாற்றுவதற்கான முயற்சியல்ல, டெலிவரி ஊழியர்களின் சலிப்பான பிரிவுகளை மாற்றவே முயற்சிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது. மனித விநியோக பணியாளர்கள் ரோபோக்களை விட அதிகமாகவே இருக்கின்றனர். ரோபோக்களால் படிக்கட்டுகளில் ஏற இயலவில்லை போன்ற பல்வேறு வரம்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக வரம்புகள் அடிப்படையில் சாலைகளை வகைப்படுத்தி வீட்டு வசதி மற்றும் பள்ளி வளாகங்கள் போன்ற சில இடங்களில் மட்டுமே ரோபோக்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பார்சல் ஆர்டர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் ரோபோக்களின் செயல்திறன் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
ட்ரோன்கள் மூலம் பீட்சா விநியோகத்தை வணிகமயமாக்க இருப்பதாக அந்நாட்டு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், செஜோங் நகரில் ட்ரோன் மூலம் பீட்சா விநியோகத்தை கொரிய நிறுவனம் "பி-ஸ்கொயர்" மற்றும் உலகளாவிய தொடரான டொமினோஸ் பீட்சா இணைந்து டெலிவரி செய்ய இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ட்ரோன் விநியோகத்தின் வணிகமயமாக்கல் பகுதி குறித்து பார்க்கையில் இது செஜோங் போரம் கிளையில் இருந்து செஜோங் லேக் பார்க் வரையாக இருக்கிறது. செஜோங் நகரமானது இந்த ஆண்டு ட்ரோன் செயலாக்க நகரமாகவும் சிறப்பு தாராளமயமாக்கள் மண்டலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பகுதியின் ஒத்துழைப்போடு இது இயக்கப்படுகிறது.
தகவலின்படி ட்ரோன் டெலிவரியானது ஒரு மணி நேரத்தில் இரண்டு முதல் மூன்று முறை திட்டமிடப்பட்டுள்ளது. இது பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்க இருக்கிறது. இதுகுறித்து தென்கொரியாவின் நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரவித்த அறிவிப்பில் செஜோங் ஏரி பூங்காவிற்கு ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் மக்களுக்கு மொபைல் ஆப் மூலமாக ட்ரோன் டெலிவரி சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதன் முதல் வணிகமயமாக்கலை நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் நிறுவனம் அறிவிக்கும்.
ட்ரோன் டெலிவரி மூலம் பீட்சா பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் செஜோங் லேப் பார்க் அருகே இருக்கும் டொமினோஸ் பீட்சாவின் அதிகாரப்பூர்வ டெலிவரி செயலியில் ஆர்டர் செய்வதன் மூலம் மொபைல் ஆப் வழியாக ட்ரோன் இருப்பிடத்தை கண்காணிக்கலாம். பீட்சா வாங்கும்போது திருட்டு மற்றும் இழப்பை தடுக்க செயல்முறையில் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக