Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

வோடபோன் ஐடியா அறிமுகம் செய்த இரண்டு புதிய திட்டங்கள்: என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி.!

ற்போது ரூ.701 மற்றும் 90

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைளை வழங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் புதிய இரண்டு திட்டங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம்.

தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள திட்டங்கள் ரூ.701 மற்றும் 901 ஆகும். குறிப்பாக இவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல்திட்டங்கள் என்று கூறப்படுகிறது. அதாவது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் ரூ.501, ரூ.601 மற்றும் ரூ.2595 திட்டங்களுடன் தற்போதுரூ.701 மற்றும் 901 திட்டங்களும் இணைகின்றன. இப்போது ரூ.701 மற்றும் 901 திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.701 திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம செய்துள்ள ரூ.701 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல் இந்த ரூ.701 திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகை, பிங்கே ஆல் நைட் அன்லிமிடெட் டேட்டா நன்மைகள், வி மூவீஸ் மற்றும் டிவி சந்தா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். பின்பு வோடபோன் ஐடியா இணையதளம் இந்த திட்டத்தின் கீழ் 32ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.901 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.901 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

அதேபோல் இந்த ரூ.901 திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகை, பிங்கே ஆல் நைட் அன்லிமிடெட் டேட்டா நன்மைகள், வி மூவீஸ் மற்றும் டிவி சந்தா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். பின்பு வோடபோன் ஐடியா இணையதளம் இந்த திட்டத்தின் கீழ் 48ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வோடபோன் ஐடியா ரூ.501 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர பிங்கே ஆல் நைட், வி மூவீஸ் மற்றும் டிவி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக ரூ.501 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 16ஜிபி கூடுதல் டேட்டா நன்மைகளும்உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியாவின் ரூ.2595 திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்புகள் உட்பட பல்வேறு சிறப்பான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!