செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க: ஒன்னு இல்ல மூன்று மாடல் இருக்கு- விரைவில் வரும் ஜியோபுக் லேப்டாப்!

ஜியோ புக் லேப்டாப் விரைவில்

ஜியோபுக் லேப்டாப் இந்தியா வெளியீடு விரைவில் நடக்க இருக்கும் நிலையில் அதன் குறிப்புகள் பிஐஎஸ் பட்டியல் தெரிவிக்கின்றன. ஜியோபுக் மூன்று மாதிரி எண்களுடன் காணப்படுகிறது.

ஜியோ புக் லேப்டாப் விரைவில்

ஜியோ புக் லேப்டாப் இந்தியாவில் வெளியீடு விரைவில் இருக்கிறது என்பதை குறிக்கும் வகையாக இந்திய தரநிலைகள் (பிஐஎஸ்) இணையதளத்தில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஜியோபுக் லேப்டாப் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவின் வரவிருக்கும் மடிக்கணினிகள் மூன்று வகைகள் சான்றிதழ் தளத்தில் பட்டியலிடப்பட்டதாக கூறப்படுகிறது. மாடல் பிரிவுகளின் பெயரை தவிர நோட்புக் குறித்து வேறு எந்த தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோபுக் வெளியீட்டு தேதி

ஜியோபுக் வெளியீட்டு தேதி தற்போது வரை உறுதியாக தெரியவில்லை. வெளிவரும் தகவலின்படி ஜியோபுக் பிஐஎஸ் சான்றிதழ் இணையதளத்தில் டிப்ஸ்டர் முகுல் சர்மா மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜியோபுக் வரிசையில் மூன்று மாடல்கள் இடம்பெறும் என்பதை குறிக்கும் வகையில் NB1118QMW, NB1148QMW, மற்றும் NB1112MM என்ற மாடல் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ப்ளூபேங்க் கம்யூனிகேஷன்

வெளியான தகவலின்படி ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் ப்ளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தெரிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் ஏற்கனவே தனது தொழிற்சாலையில் ஜியோபோன் மாடல்களை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்

இந்த ஜியோ புக் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்புடன் வரும் எனவும் மற்றொரு வேரியண்ட் ஆக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு உடன் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் புதிதாக 'ஜியோபுக்' (JioBook) என்ற மலிவு விலை லேப்டாப் சாதனத்தை வடிவமைத்து உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது. ஃபார்ம்வேர் ஜியோ பயன்பாடுகளுடன் வரலாம் என்றும், ஜியோபுக் 4 ஜி எல்டிஇ ஆதரவை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன் டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே

குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்

ஸ்னாப்டிராகன் எக்ஸ் 12 4 ஜி மோடம்

2 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 32 ஜிபி ஈஎம்சி ஸ்டோரேஜ்

4 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 64 ஜிபி இஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜ்

மினி எச்.டி.எம்.ஐ இணைப்பு

டூயல் பேண்ட் வைஃபை

ப்ளூடூத்

குவால்காம் ஆடியோ சிப் JioStore, JioMeet மற்றும் JioPages ஆப்ஸ்

மைக்ரோசாப்ட் டீம்ஸ், மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்