Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 செப்டம்பர், 2021

ஜெயிச்சிட்டோம் மாறா.! சென்னை நிறுவனம் உருவாக்கிய முதல் மேட் இன் இந்தியா பறக்கும் கார்..! இளைஞர்கள் முயற்சி..!

 ஆசியாவில் இருந்து முதல் பறக்கும் காரை வெளியிடுகிறதா சென்னை நிறுவனம்?

இந்த உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி நாம் யோசிக்கும் போதெல்லாம், நமக்குப் பல விஷயங்கள் எப்போதும் நம்முடைய கற்பனையில் வந்து செல்லும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் இந்த அதிநவீன பறக்கும் கார்கள் நம்முடைய கற்பனையில் நிச்சயமாக ஒரு முறையாவது வந்து சென்றிருக்கும். எதிர்காலத்தின் நீண்ட கனவாக இருக்கும் பறக்கும் கார் தயாரிப்பில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உலகளவில் வேலை செய்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது சென்னையைச் சேர்ந்த நிறுவனமும் களமிறங்கியுள்ளது.

ஆசியாவில் இருந்து முதல் பறக்கும் காரை வெளியிடுகிறதா சென்னை நிறுவனம்?

உலகளவில் பறக்கும் கார் தயாரிப்பில் களமிறங்கியுள்ள பல நிறுவனங்கள் ​​நாம் விரும்பும் அளவுக்கு ஒரு பொதுவான பறக்கும் கார் வடிவத்தை இதுவரை பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும், ஆசியா தனது முதல் ஹைப்ரிட் ஃப்ளையிங் காரை விரைவில் சென்னையிலிருந்து அறிமுகம் செய்யவிருக்கிறது என்பது உலக நாடுகளின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது. அதிலும் இது தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாநகரத்தில் இருந்து செயல்படும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் மூலம் உருவாக்கப்படுகிறது என்பது தமிழர்களுக்குப் பெருமிதம் சேர்த்துள்ளது.

வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் உருவாக்கியுள்ள மிரட்டலான பறக்கும் கார்

வினாடா ஏரோமொபிலிட்டி (Vinata Aeromobility) நிறுவனம், லண்டனில் நடக்கும் மிகவும் பிரபலமான விமான போக்குவரத்து கண்காட்சிகள் ஒன்றில் உலகின் பறக்கும் கார் பிரிவில் தனது மாடலை அடுத்த மாதம் அக்டோபர் 5 ம் தேதி அறிமுகம் செய்யவிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. வாகனத்திற்கான மாடல் கருத்தை வெளியிட்ட சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறுகையில், "விரைவில் ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் காரின் கருத்து மாதிரியை வினாடா ஏரோமொபிலிட்டியின் இளம் குழு அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.

இந்த பறக்கும் கார் எதற்காக பயன்படுத்தப்படும்?

இந்த பறக்கும் கார்கள் பயணம் செய்யவும், சரக்குகளை மற்ற இடங்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லவும், அவசர மருத்துவ சேவைகளை விரைவாக வழங்கவும் பயன்படுத்தப்படும்" என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் யோகேஷ் ராமநாதனால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டது. இதில் இஸ்ரோவின் முன்னணி விண்வெளி விஞ்ஞானிகள், டாக்டர் ஏஈ முத்து நாயகம் அவர்களின் முதன்மை ஆலோசகராக உள்ளார்.

ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை கர்னல் நிறுவனத்துடன் பணிபுரிகிறாரா?

அதேபோல், UAM - நகர்ப்புற ஏர் மொபிலிட்டி அணியில் ஆலோசகராக 28 வருட அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற அமெரிக்க விமானப்படை கர்னல் டான் சோல்டி பணியாற்றுகிறார். நகர்ப்புற ஏர் மொபிலிட்டி வாகனமாகச் செயல்படும் இந்த ஆட்டோமேட்டிக் பறக்கும் வாகனம், AI உதவியைப் பயன்படுத்தி தனது பயணிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. இது அடிப்படையில் ஒரு குவாட்-காப்டருடன் ட்ரோன் இறக்கைகளை கொண்ட கார் போல் தெரிகிறது.

360 டிகிரி வியூ ஜன்னல்கள்.. சக்தி வாய்ந்த ரோட்டார்கள்
360 டிகிரி வியூ ஜன்னல்கள்.. சக்தி வாய்ந்த ரோட்டார்கள்

இந்த பிறகும் காரின் உட்புற அறையில் 360 டிகிரி காட்சியை வழங்கும் பனோரமிக் ஜன்னல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் வங்கத்தின் உட்புறம் மற்றும் இருக்கைகள் ஆடம்பரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பறக்கும் வாகனம் அதன் கோஆக்சியல் குவாட்-ரோட்டரைப் பயன்படுத்தி செங்குத்தாகப் பறக்கும் மற்றும் தரையிறங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது மொத்தம் 1,100 கிலோகிராம் எடை கொண்டது மற்றும் 1,300 கிலோகிராம் எடையைத் தூக்கிச் செல்லும் திறன் கொண்டது.

என்ன வேகத்தில்? எவ்வளவு மணி நேரத்திற்கு? என்ன உயரத்தில் இது பறக்கும்?

ரோட்டர்கள் மின்சார பேட்டரியைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றது. இந்த பறக்கும் கார் உயிரி எரிபொருளைப் பயன்படுத்தி இயக்கப்படும். அதாவது பயோ பியூயல் பயன்படுத்திப் பறக்கக்கூடியது. இது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் சக்தி கொண்டது. இந்த பறக்கும் கார் ஒரே நேரத்தில் இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கிறது. அதிகபட்சமாக 60 நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பறக்கக்கூடியது. அதேபோல், இந்த பறக்கும் கார் அதிகபட்சமாக 3,000 அடி உயரத்தில் பறக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பிற்கும் இத்தனை அம்சங்களா?

இந்த பறக்கும் காரின் கூடுதல் பாதுகாப்பிற்காக, இந்த வாகனத்தோடு ஒரு வெளியேற்றும் பாராசூட் மற்றும் காக்பிட்டிற்குள் ஏர்பேக்குகளையும் நிறுவனம் பொருந்தியுள்ளது என்று கூறியுள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் பறக்கும் கார் பற்றியும் உலகில் பரவி வரும் வான்வழி வாகன கலாச்சரம் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இது போன்ற சுவாரசியமான அறிவியல் தொடர்பான செய்திகள், தொழில்நுட்ப தகவல்கள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக