Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

மன்னருக்கு சொந்தமான பகுதி... கைபற்ற நினைத்த எதிரிகள்... எந்த பகுதி அது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

----------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
----------------------------------------------

வாசகர் : சார்.. நீங்க எழுதிட்டு வர்ற தொடர்கதை இந்த வாரம் சூப்பர்.. அதிலும் அந்தக் கடைசி வரி... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்..!
கதாசிரியர் : அப்படியா..? என்ன அது கடைசி வரி?
வாசகர் : அடுத்த இதழில் முடியும்-ன்னு போட்டிருக்கே.. அதான்..!
கதாசிரியர் : 😖😖
----------------------------------------------
அமைச்சர் : மன்னா... உங்களுக்குச் சொந்தமான பகுதியைக் கைப்பற்ற, எதிரி மன்னர்கள் மோதிக்கொள்கிறார்கள்!
மன்னன் : எனக்குச் சொந்தமான பகுதியா... எது அது?
அமைச்சர் : உங்கள் முதுகுதான் மன்னா!
மன்னன் : 😩😩
----------------------------------------------
இது உண்மைதானே?
----------------------------------------------
சாலை விதியில் குறிப்பிட்டு இருந்த வாசகம்.... 

வாகனத்தை ஓட்டும் போது செல்போன் அழைப்பை எடுக்காதீர்கள், கூப்பிடுவது எமனாகக் கூட இருக்கலாம்!

வீட்டிலும், வியாபாரத்திலும் பணப்புழக்கம் அதிகரிக்க உதவும் வலம்புரி சங்கு...
----------------------------------------------
சிந்தனை வரிகள்...!!
----------------------------------------------
⭐ எதையும் இழக்காமல் மற்றொன்றை எதிர்பார்க்காதே. இதுவே இயற்கையின் நியதி. உள்ளிழுத்த மூச்சை கூட வெளியே விட்டால் தான் மீண்டும் சுவாசிக்க முடியும்.

⭐ இழந்தவை பற்றியே எப்போதும் சிந்தித்து கவலைப்படாமல் நம்பிக்கையோடு அடுத்து என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள். 

⭐ வாழ்க்கை ஒரு போர்க்களம் போன்றது. இதில் பலமானவனோ, வேகமானவனோ வெற்றிபெறப் போவதில்லை. தன்னால் முடியும் என்று நம்புபவனே வெற்றி பெறுகிறான். 

⭐ உங்கள் இலக்கு சரியானதாக இருந்தால் பிறரை பாராமல் சரியான திசையில் பயப்படாமல் பயணியுங்கள் வெற்றி உங்கள் வசம்.
----------------------------------------------
இது எப்படி இருக்கு?
----------------------------------------------
1. வெளிநாட்;டு எண்ணெய் எது?
.
.
.
.
.
சீமைஎண்ணெய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக