Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 செப்டம்பர், 2021

ஒரு வழியாக விற்பனைக்கு வந்த ஓலா ஸ்கூட்டர்.. கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன..!

 வாகன பிரியர்களுக்கு மத்தியில் ஆவல்

இன்று முதல் ஓலாவின் இ-ஸ்கூட்டர் விற்பனையானது ஆன்லைனில் தொடங்கியுள்ளது.

வழக்கமாக ஒரு வாகனம் வாங்க நீங்கள் ஷோரூம்களுக்கு சென்று, பார்த்து பார்த்து வாங்குவோம். அப்படி நீங்கள் ஓலா ஸ்கூட்டரை வாங்க முடியாது. நீங்கள் ஆன்லைனிலேயே பார்த்து புக் செய்து கொள்ளலாம்.

ஆக இது வாடிக்கையாளர்களை சற்று யோசிக்க வைத்தாலும், இதன் பிரத்யேகமான வசதிகள், மற்ற அம்சங்கள் என எல்லாமே அதன் இணையத்தில் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.

அறிமுகம் எப்போது?

பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் மின்சார வாகன சந்தையில் ஓலா ஸ்கூட்டரானது, கடந்த 75ஆவது சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ஓலாவின் S1 ரக ஸ்கூட்டர் 121 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலையானது 99,999 ரூபாய் என்றும், 181 கிலோமீட்டர் வேகம் கொண்ட வண்டியின் விலை 1,29,999 ரூபாயாகவும் விலை அறிவிக்கப்பட்டது.

வாகன பிரியர்களுக்கு மத்தியில் ஆவல்

இந்த நிலையில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இ-ஸ்கூட்டரானது சந்தைக்கு வரும் முன்னரே வாகன பிரியர்கள் மத்தியில், பெரும் ஆவலை ஏற்படுத்தியது. இதற்கு சிறந்த உதாரணம் தான் ப்ரீ புக்கிங். ஒரே நாளில் 1 லட்சம் வாகனங்களுக்கு மேலாக புக்கிங் செய்யப்பட்டது. இதன் மூலமே ஓலா ஸ்கூட்டர் மீதான ஆர்வத்தினை தெரிந்து கொள்ளலாம்.

அதெல்லாம் சரி இன்று விற்பனைக்கு வந்துள்ள ஓலா ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 யாருக்கு முன்னுரிமை

ஓலா ஸ்கூட்டரினை வாங்க புக் செய்த எவரும், மீதமுள்ள தங்களது பேமெண்ட்டினை செய்ய, மீண்டும் லாகின் செய்து அப்டேட் செய்யலாம். இது தவிர ஆர்டிஓ தகவல்கள் என முழு விவரங்களையும் முழுமையாக பதிவு செய்து முழுமையான செயல்பாட்டினையும் முடித்தவர்களுக்கு, முன்னுரிமை கொடுத்து ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படும்.எனினும் இந்த செயல்முறையும் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே அமலில் இருக்கும் என ஓலா குறிப்பிட்டுள்ளது.

எந்த வாகனத்தை தேர்தெடுத்துள்ளீர்கள்?

ஓலாவின் S1 மற்றும் S pro என்ற இரு எலெக்ட்ரிக் வண்டிகளில் எது என தேர்தெடுக்கவும். இதில் 10 வகையான வண்ணங்கள் உள்ள நிலையில் அதனை தேர்தெடுக்கவும். வாடிக்கையாளர்கள் புக் செய்யும்போது தேர்தெடுத்த கலரை மாற்ற முடியாது. ஆக இனி புக் செய்பவர்கள் தங்களுக்கு பிடித்தமான கலரை சரியாக தேர்தெடுக்கவும்.

பேமெண்ட் ஆப்சன்

அதே பாதுகாப்பான ஆன்லைன் பேமெண்ட் முறையை தேர்தெடுக்கலாம் என அறிவித்துள்ளது. மாத தவணை முறையில் வாங்க நினைப்பவர்கள், ஓலாவுடன் பார்ட்னர்ஷிப் வைத்துள்ள வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் இணைந்தும் வாங்கலாம். இதில் ஓலாவின் S1 ரக வாகனத்திற்கு 2,999 ரூபாயும், S1 proவிற்கு 3,199 ரூபாயும் மாத தவணை செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அட்வான்ஸ் பேமெண்ட்

நீங்கள் மாத தவணை முறையில் வாங்க நினைக்கிறீர்கள் எனில், அட்வான்ஸ் பேமெண்ட்டாக 20,000 - 25,000 ரூபாய் வரையில் செலுத்த வேண்டியிருக்கும். இது நீங்கள் தெர்தெடுக்கும் மாடலை பொறுத்து இந்த தொகை இருக்கும். நீங்கள் ஓலாவிற்கு இந்த தொகையை செலுத்தி விட்டீர்கள் எனில், உங்களுக்கு ஆதாரமாக உடனே இன்வாய்ஸ் பில் அனுப்பப்படும்.

இது மிக அவசியம்

முன் கூட்டியே பணம் செலுத்தினாலும் உங்களது செயல்பாடுகள் முடிந்த பின்னர் தான் டெலிவரி தேதி அறிவிக்கப்படும். இதில் 1 வருட ஓன் டேமேஜ் மற்றும் 5 வருட மூன்றாம் நபர் காப்பீடு என்பது பதிவின் போது கட்டாயம் என அறிவித்துள்ளது. எப்படியிருப்பினும் அக்டோபர் முதல் டெலிவரி தொடங்கும் என ஓலா அறிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து டெஸ்ட் டிரைவிங் ஆப்சனும் கிடைக்கும் என அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக