Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 22 செப்டம்பர், 2021

சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி...?


Coconut Poli
 
மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - சுவைக்கு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் வரை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
 
கோதுமை மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணெய்யைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
 
வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும். 
 
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும். வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும். சுவையான தேங்காய் போளி தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!