Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 செப்டம்பர், 2021

ஆண்கள் இடதுகைலயும்... பெண்கள் வலதுகைலயும் வாட்ச் கட்டுறாங்களே அது ஏன்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------------------

ராமு : டாக்டர்.. என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா
டாக்டர் : எந்த அளவுக்கு பாக்குறாங்க?
ராமு : கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!
டாக்டர் : 😂😂
-----------------------------------------------------

பாபு : பொதுவா ஆண்கள் இடதுகைல வாட்ச் கட்டுவாங்க பெண்கள் வலதுகைல வாட்ச் கட்டுவாங்க ஏன் தெரியுமா?
கோபு : தெரியாதே....
பாபு : மணி பாக்கத்தான்!!
கோபு : 😬😬
-----------------------------------------------------
பொது அறிவு!!
-----------------------------------------------------
 
1. புல்லாங்குழலில் எத்தனை துளைகள் உள்ளன?

2. நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை எது?

3. உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?

4. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது எது?

விடை :

🎷 9

🍃 பூவரசம் இலை

🌎 தென் ஆப்பிரிக்கா

🌴 பேரீச்சை மரம்

-----------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
-----------------------------------------------------
 
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருள் :

பொருள் சேர்க்கும் போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
-----------------------------------------------------
 இன்றைய கடி...!!
-----------------------------------------------------
1. எந்த மண்ணை சாப்பிடலாம்?
.
.
.
.
களிமண்ணை

2. மீந்து போகும் பழம் எது?
.
.
.
.
எலுமிச்சம்பழம் 

3. எந்தக் கட்டையை சாப்பிடலாம்?
.
.
.
.
கொழுக்கட்டையை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக