Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

பஞ்ச் டயலாக் தெரியும்... அதென்ன லஞ்ச் டயலாக்?🤔 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

-------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-------------------------------------------------

அமலா : இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.
விமலா : அது லஞ்ச் டயலாக்காம்..!
அமலா : 😂😂
-------------------------------------------------
பாபு : சநவசைந ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்களே, ஏன்?
கோபு : கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.
பாபு : 😩😩
-------------------------------------------------
தன்னம்பிக்கை வரிகள்...!!
-------------------------------------------------
உங்களுக்கான நேரம் குறைவானது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதை வீணடிக்க வேண்டாம்.

பிறரிடம் இருந்து எதையும் பிரபஞ்சம் உங்களுக்கு பிடுங்கி கொடுப்பதில்லை.

உங்களுக்கானது உங்களை வந்தடையும் எனவே பிறரின் வளர்ச்சியைக் கண்டு மகிழுங்கள், வாழ்த்துங்கள். விரைவில் நீங்களும் அந்த நிலையை அடைவீர்கள். 

எந்த விஷயம் நீங்கள் செய்தாலும் என்றுமே நம்பிக்கையோடு கடைபிடிக்க வேண்டிய தாரக மந்திரம் என்னால் முடியும் என்பது தான். 

ஒரு நாளில் எதுவும் கிடைத்து விடாது. ஆனால் ஒருநாள் எல்லாம் கிடைக்கும்.

-------------------------------------------------
அட அப்படியா?
-------------------------------------------------
ஒரு போதும் மலராத பூ எது?
.
.
.
.
அத்திப்பூ

வேர் இல்லாத தாவரம் எது?
.
.
.
.
இலுப்பை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக