இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ரேஷன் அட்டைகளில் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பல மாற்றங்களுக்கும் எளிய முறையில் ஆன்லைனில் திருத்தம் செய்து கொள்ளும் வகையில் வழிவகை செய்துள்ளது.
இந்தியாவில் ரேஷன் கார்டு போலவே ஆதார் அட்டையும் மற்றொரு முக்கியமான ஒன்றாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசு சலுகைகள், மானியங்கள், வங்கி கணக்கு, வருமான வரி தாக்கல் செய்தல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களிலும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஆதார் கார்டினை அனைத்து வகையான முக்கிய ஆவணங்களுடனும், அரசு இணைக்க கோரி வருகிறது.
குறிப்பாக ஆதார் கார்டு ரேஷன் கார்டு இணைப்பு, இபிஎஃப் ஆதார் இணைப்பு,. வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு, பான் எண்ணுடன் இணைப்பு, வருமான வரி தாக்கல் இப்படி பல முக்கிய இடங்களிலும், ஆதார் பதிவு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பதும், நாடு முழுவதும் முக்கிய ஆவணமாக இருக்கும் ரேஷன் கார்டில் ஆதார் அதற்கான எப்படி அப்டேட் செய்வது என்பது குறித்தான பதிவினை தான் பார்க்க இருக்கிறோம்.
முன்னதாக அரசு பிரத்யேக ஆப்பினையும் உருவாக்கியிருந்தது. எனினும் தற்போது அரசின் இணையதளத்தில் சென்று நேரடியாக ஆன்லைனிலும் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
தற்போது மத்திய அரசு ஒரே நாடு மற்றும் ஒரே அட்டை என்ற திட்டத்தினை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒருவர் எங்கு வேண்டுமானாலும், குறைந்த விலையில் பொருட்களை வாங்கி பயனடையும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் உங்களது ரேஷன் கார்டில் ஆதாரினை அப்டேட் செய்யவில்லை எனில், இது போன்ற சலுகைகளை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அரசின் https://tnpds.gov.in/ என்ற தளத்திற்கு செல்லவும். அதில் பயனாளர் நுழைவு என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா எழுத்துகளை பதிவு செய்து கிளிக் செய்தால் 7 இலக்க ஓடிபி எண் வரும். அதனை பதிவு செய்து க்ளிக் செய்தால், அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும்.
அந்த புதிய பக்கத்தில் ஆதார் எண்கள் என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களது ரேஷன் கார்டில் தற்போதுள்ள குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை யார் யார் உள்ளார்கள் என்ற பல விவரங்கள் இருக்கும்.
ஏற்கனவே நீங்கள் ஆதார் கார்டினை பதிவு செய்திருந்தால் பிரச்சனை இல்லை. அப்படி செய்யாவிட்டால் ஸ்கேன் என்ற ஆப்சன் இருக்கும். அதனை கிளிக் செய்து ஆதாரினை அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஸ்கேன் என்பதை கிளிக் செய்த பின்பு, ஸ்கேன் செய்யலாமா? என கேட்கும். கியூஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்து அப்டேட் கொள்ளலாம்.
இதே மற்றொரு முறையாக https://uidai.gov.in/ என்ற தளத்திலும் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
இதில் start now என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் உங்களது முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து, ரேஷன் கார்டு பெனிபிட் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதில் உங்களது ஆதார் கார்டு நம்பர் மற்றும் இமெயில் ஐடி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். விவரங்களை பதிவிட்டு பிறகு பதிவு செய்தால், உங்களது பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். ஓடிபியை அப்டேட் செய்து சப்மிட் கொடுத்து கொள்ளுங்கள். இதன் பிறகு உங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைப்பு விரைவில் அப்டேட் ஆகிவிடும்.
ஒரு வேளை உங்களது ரேஷன் கார்டில் பதிவு செய்த மொபைல் எண் என்பது இல்லையெனில், ஆஃப் லைனில் சென்றும் அப்டேட் செய்து கொள்ளலாம். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட விவரங்களை கொடுத்து அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை ஆதார் மையத்தில் சென்று, பயோமெட்ரிக் முறையில் அப்டேட் செய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக