
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம் கடந்த 2 வருடத்திற்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதற்கு டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாத் மிக முக்கியமான பதிலை ஒரு பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டிசிஎஸ் ராஜேஷ் கோபிநாத்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாத், நான் 1990ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் சேரும் போது டாடா ஸ்டீல் மற்றும் டெல்கோ அதாவது இன்றைய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் டாடா குழுமத்தின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தது.
யாருக்குத் தெரியும்..?
யாருக்கு டிசிஎஸ் இவ்வளவு பெரிய நிறுவனமாக வளரும் என நினைத்திருக்க முடியும். இதேபோலத் தான் இன்றும். சந்தை வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்களின் வளர்ச்சியும், துறையின் ஆதிக்கமும் மாறுபடும். இன்று டாடா குழுமம் டிஜிட்டல் துறை வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவிலான முதலீட்டையும் திட்டத்தை வளர்ச்சிக்கான விதையும் விதைக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 20 வருடத்தில் டிசிஎஸ் நிறுவனத்தை விடவும் டாடா டிஜிட்டல் டாடா குழுமத்தின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கும். இதேபோல் டாடா குழுமத்தின் நிதியியல் சேவை பிரிவும் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடையவும் வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பார்மா துறை
இதேபோல் எதிர்காலத்தையும் தற்போதைய சூழ்நிலையை ஒப்பிடும்போது இந்தியாவில் பார்மா துறை பெரிய அளவில் நிறுவனங்களால் எக்ஸ்புளோர் செய்யப்படாமல் உள்ளது. கொரோனா தொற்றுக் காலத்தில் இந்தியாவில் பார்மா துறையில் இருக்கும் பிரச்சனைகள் தெரிய வந்துள்ளது.
இந்திய பார்மா துறை
எனவே எதிர்காலத்தில் இந்திய பார்மா துறையும் மிகப்பெரிய வளர்ச்சி அடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிசிஎஸ் குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற 5 வருடத்தில் மிகப்பெரிய அனுபவத்தைத் தான் பெற்று உள்ளதாகவும், கொரோன பாதிப்பை டிசிஎஸ் வென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Work from Home முடிவு
இந்தியாவில் லாக்வுடன் அறிவிக்கப்பட்ட உடனே ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில், டிசிஎஸ் தான் முதல் முறையாக அனைவருக்கும் Work from Home கொடுத்து ஐடி துறை வேலைவாய்ப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது.
80 சதவீத ஊழியர்கள்
இதேபோல் தற்போது கொரோனாவில் இந்தியா மீண்டு வரும் நிலையில் அதிகப்படியான ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து இந்திய ஐடி துறையில் டிரெண்ட் செட் செய்யத் திட்டமிட்டு உள்ளது. ராஜேஷ் கோபிநாதன் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்திற்குள் 70 முதல் 80 சதவீத ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது. இந்த அளவீடுகள் கொரோனா தொற்றின் பரவலை அடிப்படையில் இறுதியாக முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
டாடா டிஜிட்டல்
டாடா டிஜிட்டல் நிறுவனத்தில் தான் ஆன்லைன் வர்த்தகம் அனைத்தும் வருகிறது, இந்த நிறுவனத்தின் கீழ் தான் டாடா குழுமம் அடுத்த சில மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் சூப்பர் ஆப்-ம் வருகிறது. எனவே ரீடைல் சந்தையில் டாடா குழுமம் டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் வாயிலாக மிகப்பெரிய மாற்றத்தைச் செய்ய உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக