இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது, குறிப்பாக டாடா நிறுவனம் மட்டும் சுமார் 10,000 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது, இதேபோல் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவது தினமும் பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் போதுமான எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கும் வேளையில் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை முழு மனதுடன் வாங்கவும், பயன்படுத்தவும் முடியாமல் மக்கள் உள்ளனர்.
இந்த நிலையை மாற்ற அனைத்து முன்னணி நிறுவனங்களும் திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க ஏற்கனவே ஜியோ BP நிறுவனம் BluSmart நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்திய ரீடைல் எரிபொருள் சந்தையில் அனைத்து நிறுவனங்களுக்கும் முன்னோடியாக ரிலையன்ஸ் எலக்ட்ரிக் சார்ஜிங் அமைத்து இத்துறையில் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டது.
பாரத் பெட்ரோலியம்ஆனால் பாரத் பெட்ரோலியம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவில் புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில் இந்த வாய்ப்பை விடக் கூடாது என்பதற்காகக் குறுகிய காலத் திட்டமாக நாடு முழுவதும் 1000 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பாரத் பெட்ரோலியம் தலைவர் அருண் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
1000 சார்ஜிங் ஸ்டேஷன்பாரத் பெட்ரோலியம் கார்ப் தற்போது 44 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் வைத்துள்ள நிலையில், அடுத்தச் சில மாதங்களுக்குள் 1000 சார்ஜிங் ஸ்டேஷனை புதிதாக அமைக்க உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகத்தில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் பாரத் பெட்ரோலியம் கார்ப் இந்தியாவில் தற்போது 19,000 ரீடைல் விற்பனையகங்கள் (Petrol Bunk) வைத்துள்ளது. இதில் 7000 ரீடைல் கடைகள் அதாவது 3ல் ஒரு பங்கு ரீடைல் விற்பனையகத்தில் கேஸ், எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருளை விற்பனை செய்யும் வகையில் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த மாற்றம் மூலம் ஆட்டோமொபைல் துறையில் புதிதாக மாறி வரும் தொழில்நுட்பம் அனைத்திற்கும் பாரத் பெட்ரோலியம் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பது தெரிகிறது.
5000 கோடி ரூபாய் முதலீடுஇதேபோல் பாரத் பெட்ரோலியம் அடுத்த 5 வருடத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 5000 கோடி ரூபாயும், இதேபோல் பயோ எரிபொருள் பிரிவிலும் 7000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக