![]()
ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் பாலிவுட் படம் மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் கதை என்று கூறப்படுகிறது. ஆனால் கதையை அட்லி சுடவில்லையாம்.
கோலிவுட்டில் தான் யார் என்று காட்டிவிட்ட அட்லி தற்போது பாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார். ஷாருக்கானை வைத்து லயன் என்கிற பெயரில் படம் எடுத்து வருகிறார்.
அந்த லயன் தலைப்பு சும்மா தற்போதைக்கு வைக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால் அதற்கே, தலைப்பே காப்பியா என்று சினிமா ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அட்லிக்கு வாழ்த்து தெரிவிக்கும் கையோடு அந்த லயன் படக் கதை தொடர்பாக விளாசவும் செய்கிறார்கள்.
பலரையும் கவர்ந்த மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் கதை தான் அட்லியின் லயன் படத்தின் கதையாம். ஆனால் மணி ஹெய்ஸ்டின் இந்தியா உரிமையை முறையாக வாங்கிவிட்டார் ஷாருக்கான் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் மணி ஹெய்ஸ்டின் கதையை அட்லி சுடவில்லை.
அட்லி படம் வந்தாலே இது எங்களின் கதை என்று சில இயக்குநர்கள் சொல்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் அட்லியோ, நான் எந்த படத்தையும் பார்த்து இன்ஸ்பையர் ஆகவில்லை என்று கூலாக பதில் அளித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக