Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 25 நவம்பர், 2021

ரூ.250 கோடி முதலீட்டில் தமிழகத்தில் நுழையும் மும்பை இவி சார்ஜிங் க்ரூப்- முதல்வர் முன்னிலையில் புதிய ஒப்பந்தம்

 ரூ.250 கோடி முதலீட்டில் தமிழகத்தில் நுழையும் மும்பை இவி சார்ஜிங் க்ரூப்- முதல்வர் முன்னிலையில் புதிய ஒப்பந்தம்

சுமார் ரூ.250 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை நிறுவ மெஜந்தா நிறுவனம் தயாராகி வருகிறது. இது தொடர்பான தமிழக அரசு உடனான இந்த நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மும்பையை சேர்ந்த, பொது இவி சார்ஜிங் நிலைய கட்டமைப்பு நிறுவனமாக மெஜந்தா விளங்குகிறது. அதாவது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை உருவாக்குவது தான் இந்த நிறுவனத்தின் பணி ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் நவி மும்பையில் இந்தியாவின் மிக பெரிய சார்ஜிங் நிலையத்தை கட்டமைத்து திறந்து வைத்திருந்த இந்த நிறுவனம் விரைவில் நம் தமிழகத்தில் தொழிற்சாலையினை நிறுவ உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கடந்த நவ.23ஆம் தேதி கோவையில் நடைபெற்ற 2021 தமிழ்நாடு தொழில்முனைவோர் மாநாட்டில் தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. மெஜந்தா நிறுவனத்தின் சிஇஓ-வும், நிர்வாக இயக்குனருமான மேக்ஸன் லீவிஸ் தமிழக மாநிலம் முழுவதும் சார்ஜிங் நிலையங்களை உருவாக்கும் இந்த ஒப்பந்ததில் கையெடுத்திட்டுள்ளார்.

இதற்காக கிட்டத்தட்ட ரூ.250 கோடியை முதலீடு செய்யும் மெஜந்தா, வடிவமைப்பு & தயாரிப்பு மேலாண்மை மற்றும் புதிய புதிய இவி தொழிற்நுட்பங்களை கண்டறியும் அளவிற்கு கட்டமைப்பு தரத்தினை உருவாக்க புதியதாக நமது மாநிலத்தில் தொழிற்சாலை ஒன்றினை நிறுவவுள்ளது. அதாவது இந்த முதலீட்டு தொகையின் மூலம் புதியதாக தொழிற்சாலை மட்டுமில்லாமல், ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையமும் உருவாக்கப்பட உள்ளது.

ஓர் மாநிலத்தில் புதியதாக தொழிற்சாலை ஒன்று கட்டமைக்கப்பட உள்ளது என்றால், அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட பகுதியினருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன என்று அர்த்தமாகும். மெஜந்தாவும், இந்த புதிய தொழிற்சாலை நிறுவப்பட்டால் ஏறக்குறைய 500 வேலை வாய்ப்புகள் அடுத்த இரண்டு வருடங்களில் உருவாகும் என தெரிவித்துள்ளது.

மொத்தமாக அடுத்த ஐந்து வருடங்களில் 1,600 பணியாளர்களுக்கு இவி சார்ஜரை தயாரிப்பது, அவற்றை அசெம்பிள் செய்வது, பொருத்துவது மற்றும் அதுகுறித்த மற்ற செயல்பாடுகளை கையாள மெஜந்தா நிறுவனம் பயிற்சி அளிக்கவுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் வலுவான இவி சார்ஜர் விநியோக சங்கிலியை உருவாக்கி, தமிழகத்தை இவி-க்கு தயார் மாநிலமாக மாற்றுவதுதான் தற்போதைக்கு தங்களுக்கு நோக்கமாக உள்ளதாக மெஜந்தா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெஜந்தா நிறுவனம் பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளது. சூரிய ஒளி மூலமாக செயல்படக்கூடிய இவி சார்ஜிங் நிலையங்கள், மும்பை விரைவு சாலையில் இந்தியாவின் முதல் இவி சார்ஜிங் நடைப்பாதை மற்றும் சார்ஜ்க்ரிட் செயலி என சொல்லி கொண்டே போகலாம். இதில் சார்ஜ்-க்ரிட் செயலியானது மெஜந்தாவின் அனைத்து சார்ஜிங் நிலையங்களையும் ஒன்றாக மொபைலில் ஒருங்கிணைக்கிறது.

தமிழக அரசுடனான இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பின்னர் பேசிய மேக்ஸன் லீவிஸ், தமிழ்நாடு அரசாங்கத்துடன் இணைவது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் வலுவான இவி சூழலியலை உருவாக்க வேண்டும் என்ற எங்களது நோக்கத்திற்கு இந்த புதிய ஒப்பந்தம் வலுச்சேர்க்கிறது என்றார்.

திறமையான பணியாளர்கள், வலுவான உள்கட்டமைப்பு, முற்போக்கான மற்றும் முதலீட்டாளர் நட்பு அணுகுமுறை கொண்ட அரசாங்கம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து, நாட்டின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அடுத்த மையமாக தமிழகத்தை உருவாக்குவோம் என மெஜந்தா நம்பிக்கை கொண்டுள்ளது. மெஜந்தா போன்ற லாஸ்ட்-மைல் லாஜிஸ்டிக் நிறுவனங்களின் போட்டி நாடு முழுவதும் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இவை தங்களது வணிகத்திற்காக ஒன்றுடன் ஒன்று போட்டியிடுகின்றன என்றாலும், இவற்றின் போட்டியினால் இந்திய போக்குவரத்து கார்பன் மாசு இல்லாததாக மாறுவதை சொல்லமால் இருக்க முடியாது. இத்தகைய நிறுவனங்களின் பங்களிப்பால் தனிப்பயன்பாட்டிற்காக வாங்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, எரிபொருள்களின் விலை உயர்வால், டயர்-1 மற்றும் டயர்-2 நகரங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை பெருகி வருகிறது. நம் நாட்டில் இவி பயன்பாடு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் வழியாகதான் அதிகரித்து வருகிறது என்பதை ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். நாளுக்கு நாள் புதியதாக வருகை தரும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தான் இதற்கு சாட்சி. அதேநேரம் எலக்ட்ரிக் கார்களின் விற்பனையும் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

டாடா மோட்டார்ஸ் போன்ற மிகவும் சில நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க, பெரும்பான்மையான எலக்ட்ரிக் கார்கள் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு விற்பனை முறைகள் மாறினாலும், இவை அனைத்திற்கும் பொதுவாக தேவைப்படுவது ஒன்று, சார்ஜிங் நிலையங்கள். அதனை தமிழகத்தில் உருவாக்குவதற்காகவே மெஜந்தா நம் மாநிலத்தில் காலூன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக