
அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் தவறுதலாக வலிநிவாரணிக்கு பதிலாக வயர்லெஸ் ஹெட்போனை விழுங்கியுள்ளார். இதை உணர்ந்த பின்னர் அச்சமுற்று அவர் சத்தமாக அழ ஆரம்பித்தார். இந்த முட்டாள்தனத்தைப் பற்றி அந்த பெண்ணே சமூக ஊடகங்களில் கூறியுள்ளார்.
இந்த அமெரிக்க (Amercia) பெண்ணின் நிலைக்கு மக்கள் வெவ்வேறு வழிகளில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக, ஹெட்போன்களை விழுங்கியதால் அந்தப் பெண்ணுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.
ஒரு கையில் மருந்து, மறு கையில் ஹெட்ஃபோன்
அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் வசிக்கும் கார்லி, கேமரா முன் அழுது தான் செய்த தவறை பற்றி தெரிவித்ததாக 'டெய்லி ஸ்டார்' செய்தி வெளியிட்டுள்ளது. அவள், 'நான் படுக்கையில் ஓய்வில் இருந்தேன். ஒரு கையில் வயர்லெஸ் ஹெட்ஃபோன்களும் மறு கையில் வலிநிவாரணி மாத்திரையும் வைத்திருந்தேன்.
தண்ணீர் பாட்டிலை எடுத்து மருந்துக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கிவிட்டேன். நான் விழுங்கியது வலி நிவாரணி அல்ல என்பதை பின்னர்தான் உணர்ந்தேன்.
வயிற்றில் இசை கேட்டது
இருப்பினும், தான் மாத்திரைக்கு பதிலாக ஹெட்ஃபோனை விழுங்கியதை அவர் உணரவில்லை. 'நான் பாட்டு கேட்க எனது ஹெட்ஃபோன்களை தேடத் துவங்கினேன். பின்னர் அதன் லொகேஷனைத் தேடத் துவங்கினேன். அது நான் இருந்த இடத்தையே காண்பித்தது. இதற்குப் பிறகு நான் 'ஃபைண்ட் மை ஏர்போட்' இசையை வாசித்தேன். அதன் ஒலி என் வயிற்றில் கேட்டது.’ என்று கார்லி கூறினார்.
பயந்து போன அந்த பெண் உடனடியாக மருத்துவரிடம் சென்றார்
இதைத் தொடர்ந்து அந்த பெண் மிகவும் பதற்றமடைந்து உடனடியாக மருத்துவரிடம் சென்றார். ஹெட்ஃபோன்களால் உள் உறுப்புகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது எக்ஸ்ரேயில் தெரிந்ததும்தான் அந்தப் பெண் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இருப்பினும், ஹெட்ஃபோன்கள் (Headphones) எப்படி வெளியே வரும் என்ற குழப்பமும் அச்சமும் கார்லிக்கு இருந்தது. ஹெட்ஃபோனை வெளியே எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ என அவர் யோசித்தார். எனினும், இரண்டாவது நாளில் ஹெட்ஃபோன்கள் இயற்கையான முறையில் வெளிவந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக