Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 26 நவம்பர், 2021

ஈகாமர்ஸ் துறையில் கலக்கப்போகும் JSW குரூப்.. 250 கோடி ரூபாய் முதலீடு திட்டம்...!

  JSW One Homes திட்டம்

இந்தியாவில் ஈகாமர்ஸ் சேவை அனைத்து துறையிலும் வந்துள்ள நிலையில் கட்டுமான துறைக்கு இதுவரை பெரிய அளவிலான தளம் உருவாக்கப்படவில்லை, இந்த வர்த்தக வாய்ப்பை உணர்ந்த JSW குரூப் சுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக ஒரு ஈகாமர்ஸ் தளத்தைப் பிப்ரவரி மாதம் உருவாக்க முடிவு செய்தது.

 JSW குரூப் உருவாக்கும் புதிய JSW ஓன் பிளாட்பார்ம் தளத்தில் கட்டுமானத்திற்குத் தேவையான ஸ்டீல், சிமெண்ட் மற்றும் பெயின்ட் ஆகியவற்றை ஆன்லைன் வாயிலாகவே விற்பனை செய்ய உள்ளது.

இப்புதிய தளத்தின் மூலம் வருடத்திற்கு 500 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தை நேரடியாக மக்களிடம் இருந்து பெற்ற JSW குரூப் திட்டமிட்டு உள்ளது.

தமிழ்நாடு

JSW குரூப் தனது ஈகாமர்ஸ் வர்த்தகமான JSW ஓன் பிளாட்பார்ம் சேவையைத் தற்போது தமிழ்நாட்டில் துவங்கியுள்ள நிலையில், இச்சேவையை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. JSW குரூப் இரு பிரிவுகளில் ஈகாமர்ஸ் சேவை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது.

JSW One MSME

JSW ஓன் பிளாட்பார்ம் கீழ் மக்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் தனித்தனி தளத்தை உருவாக்க உள்ளது. ஆதாவது B2B பிரிவில் JSW One MSME சேவை, இந்தத் தேவையில் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள், கான்டிராக்டர் தங்களது பொருட்களை விற்பனை செய்யும் ஒரு மார்கெட்பிளேஸ் ஆக விளங்கும். இத்தளதித்ல் ஆன்லைன் பரிமாற்றம் முதல் ஆர்டர் டிராகிங் சேவை வரையில் அனைத்தும் இருக்கும்.

 டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனம் தனது தயாரிப்புகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் விதமாக Ashiyana என்ற தளத்தின் மூலம் அனைத்து கட்டுமான பொருட்களையும் விற்பனை செய்கிறது. இந்தத் தளம் குறிப்பாகத் தனிப்பட்ட நபர் வீட்டு கட்டுவோருக்காக உருவாக்கப்பட்டது. மேலும் இத்தளத்தில் இருந்து தான் மொத்தம் வர்த்தகத்தில் 20-25 சதவீத வர்த்தகத்தை டாடா ஸ்டீல் பெறுவதாக அறிவித்துள்ளது.

நிப்பான் ஸ்டீல்

ஆர்செலார் மிட்டல்-ன் நிப்பான் ஸ்டீல் eSales என்ற தளத்தை உருவாக்கி தனது ஸ்டீல் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. இதேபோஸ் அரசு அமைப்பான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா Sail Suraksha என்ற தளத்தின் மூலம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

ஈகாமர்ஸ் தளம்

டாடா, நிப்பான் ஸ்டீல், SAIL ஆகிய நிறுவனங்களின் ஈகாமர்ஸ் தளம் தனது சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக மட்டும் உருவாக்கப்படது. ஆனால் JSW குரூப்-ன் JSW One MSME தளத்தின் மூலம் கட்டுமான துறைக்கான ஒரு ஈகாமர்ஸ் தளமாக மாற வாய்ப்பு உள்ளது.

டார்கெட் 2023

JSW One MSME சேவை தற்போது தமிழ்நாட்டில் துவங்கியுள்ள நிலையில், விரைவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தை இணைக்க உள்ளது. 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் JSW One MSME சேவை விரிவாக்கப்படும்.

JSW One Homes திட்டம்

JSW குரூப் JSW One Homes என்ற ஒரு தனி நிறுவனத்தையும் உருவாக்கக் கடமைப்பட்டு உள்ளது. இந்தத் தளம் தனிநபருக்கு வீடு கட்டுமான சேவைகளை நிறுவனத்தின் வாயிலாக நேரடியாக அளிக்கத் திட்டமிட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக