இந்தியாவினை சேர்ந்த வங்கி அல்லாத நிதி நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் பல்வேறு கடன்களை வழங்கி வருகின்றது. குறிப்பாக கோல்டு லோன் என்பது இந்த நிறுவனத்தில் அதிகம். இந்த நிறுவனத்தின் கடந்த செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் கூட பலமான லாபத்தினை கண்ட நிலையில், தற்போது பொருளாதாரம் மெதுவான வேகத்தில் இருந்து வரும் நிலையில் கடன் வளர்ச்சியும் குறைந்துள்ளது.
அதன் படி குறைந்த வருவாய் காரணமாக ஒருங்கிணைந்த லாபம் 8.8% அதிகரித்து, 369.88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கி அல்லாத நிதி நிதி நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் கடந்த ஆண்டில் 405.44 கோடி ரூபாய் லாபத்தினை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட சொத்துகள் மதிப்பு (assets under management) 5.7% அதிகரித்து, 28,421.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 26,902.73 கோடி ரூபாயாக உள்ளது.
செயல்பாட்டின் மூலம் வருவாய்
செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 2.15% குறைந்து, 1,531.92 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1,565.58 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த நிதி நிறுவனத்தின் குழும உறுப்பினர்கள் டிவிடெண்டாக, ஒரு பங்குக்கு 0.75 ரூபாயாக அறிவித்துள்ளது.
கோல்டு லோன் போர்ட்போலியோ
இதன் கோல்டு லோன் போர்ட்போலியோவில் 13.2% வளர்ச்சி கண்டு, 18,719.53 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 16,539.51 கோடி ரூபாயாக இருந்தது. இது நடப்பு காலாண்டில் நல்ல வளர்ச்சியினை கண்டு இருந்தாலும், லாபத்தில் சரிவினைக் கண்டுள்ளது.
லைவ் கோல்டு லோன் வாடிக்கையாளர்கள்
லைவ் கோல்டு லோன் வாடிக்கையாளர்கள் விகிதமானது 24.1 லட்சத்தில் இருந்து, 25.1 லட்சமாக அதிகரித்துள்ளது.
நகைக் கடன், மைக்ரோ கடன் அல்லது வீடு மற்றும் வாகன கடன், வணிக கடன் உள்ளிட்டவற்றில் நல்ல வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளதாகவும், இது இனி அடுத்து வரவிருக்கும் காலாண்டுகளிலும் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக