Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 20 நவம்பர், 2021

எலோன் மஸ்க்கின் Starlink இல் வேலை பார்க்க ஆசையா? இந்தியர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு..

Starlink இன் இந்தியத் தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான ஸ்டார்லிங்க் இந்தியாவில் முழுநேர ஊழியர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. இந்தியாவில் இப்போது இந்த நிறுவனம் இரண்டு வேலை தலைப்புகளின் கீழ் வேலை வாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் முதல் பிரிவு கிராமப்புற மாற்றத்தின் இயக்குனர் பணிக்கான காலியிடம் ஆகும். இதன் இரண்டாவது பிரிவு நிர்வாக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.

Starlink இன் இந்தியத் தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

Starlink இன் இந்தியத் தலைவர் சஞ்சய் பார்கவா, LinkedIn இடுகையில் கிடைக்கக்கூடிய வேலைகளைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். வேலையில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். LinkedIn இல் சஞ்சய் பார்கவா பகிர்ந்த இடுகையில் இணைப்பு கிடைக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் சுயவிபரங்களை அனுப்பாமல் மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்குமாறு பார்கவா கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

"எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டெண்ட் பதவி என்பது பணியாளர்களின் தலைமைப் பதவி அல்ல என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மேலும், இயக்குநர் கிராமப்புற மாற்றம் பணியிடம் தொழில்நுட்பம் தொடர்புடையதாக இருக்க வேண்டும். கிராமப்புற இந்தியாவில் தொடங்கி மாற்றத்தை துரிதப்படுத்துவதற்கும் மற்றொரு சிறிய படி," என்று பார்கவா மேலும் கூறினார். மேலும், பார்கவா, எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வணிகரீதியாக உரிமம் எப்போது கிடைக்கும்?

ஆனால் நிறுவனம் வணிகரீதியாக உரிமம் பெறும் வரை இதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் மூலம் வேலை வாய்ப்புகள் நிச்சயமாக அதிகரிக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். வேலைத் தேவைகள் குறித்த முழுமையான விவரங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதி அளவுகோல்கள் மற்றும் கூடுதல் தேவைகளும் அங்கு விளக்கப்பட்டுள்ளது.

Starlink இல் வேலை விண்ணப்பத்திற்கான இணைப்புகள்

நீங்கள் 'கிராமப்புற மாற்றம் இயக்குனருக்கு' விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது 'நிர்வாக உதவியாளர்' பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், சஞ்சய் பார்கவா தனது LinkedIn இடுகையில் பகிர்ந்துள்ள இந்த இணைப்பிற்குச் செல்லவும். அந்த இணைப்புகளில் வேலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன, மேலும் மக்கள் நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்க இந்த லிங்க் மட்டுமே அனுமதிக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

ஸ்டார்லிங்க் தனது சேவையை இந்தியாவில் எப்போது துவங்குகிறது?

ஸ்டார்லிங்க் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்வதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களை நிறுவனம் இன்னும் பெறவில்லை. ஆனால் அதற்கு இப்போது அதிக நேரம் எடுக்க வேண்டியதில்லை என்பதை நிறுவனத்தின் இந்திய அதிகாரி கூறியுள்ளார். சாட்காம் துறையானது நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப் போகிறது மற்றும் ஸ்டார்லிங்க், ஒன்வெப் போன்ற நிறுவனங்கள், இந்திய மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைக் கொண்டுவருப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

எலான் மஸ்க் முன்வைத்துள்ள சவால்

சமீபத்தில் எலான் மஸ்க் பங்குகளை விற்று சுமார் 6 பில்லியன் டாலர்களை WFP-க்கு வழங்க தயாராக இருப்பதாக முன்வந்துள்ளார். ஆனால் WFP அதன் கணக்கை எவ்வாறு செய்கிறது என்பதை காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்திருக்கிறார். WFP இயக்குனர் டேவிட் பீஸ்லி, இதே தலைப்பில் விவாதத்திற்கு மஸ்க்கை அழைத்திருக்கிறார். எலான் மஸ்க் அதன் நிறுவனங்களை தவிர்த்து பிற கருத்துகளை வழங்குவதில் வல்லவர். அதன்படி தற்போது எலான் மஸ்க் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு சவாலை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் தனது பணத்தை கொடுக்க தயார்

எலான் மஸ்க் தெரிவித்த கருத்துகள் ஆனது அவரது நிறுவனங்கள் குறித்தோ அல்லது கிரிப்டோ கரன்சி குறித்தோ அல்ல. இது சமூகம் சார்ந்தது ஆகும். உலகளாவிய பசி குறித்த தீவிரமான விஷயம் என்பதாகும். ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (டபிள்யூஎஃப்பி) இயக்குனர் டேவிட் பீஸ்லி, சிஎன்என்-க்கு பதிலளிக்கையில், மஸ்க் அல்லது ஒரு பில்லியனர்களின் 2 சதவீத செல்வத்தை செலுத்தினார் உலகளாவிய பசியை தீர்க்க முடியும் என கூறினார். இதையடுத்து ஐநா சரியான உத்தியை கொண்டு வந்தால், தனது பணத்தை கொடுக்க பணக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.

உலகின் பசியை 6 பில்லியன் டாலர் எவ்வாறு தீர்க்கும்?

உலகின் பசியை 6 பில்லியன் டாலர் எவ்வாறு தீர்க்கும் என்பதை WFP டுவிட்டர் விவரிக்க முடிந்தால், தற்போதே டெஸ்லா பங்குகளை விற்று அதை செய்வேன் என இணை நிறுவனரின் டுவிட்டருக்கு மஸ்க் பதிலளித்தார். அது திறந்த மூல கணக்கியலாக இருக்க வேண்டும் எனவும் பணம் செலவிடப்படுகிறது என்பதை பொதுமக்கள் துல்லியமாக பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

42 மில்லியன் மக்களுக்கு உதவும் நோக்கம்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்க், மொத்தம் 300 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பை கொண்டிருக்கிறார். பீஸ்லி கூற்றுப்படி, இந்த செல்வத்தில் 2 சதவீதம் சுமார் 6 பில்லியன் டாலர் இருக்க வேண்டும். "42 மில்லியன் மக்களுக்கு உதவும், நாம் அவர்களை அடையவில்லை என்றால் இறந்துவிடுவார்கள். இதை கொடுப்பது சிக்கலானது அல்ல". பீஸ்லி அதே அந்த டுவிட்டர் பதிவில் முழுமையான முறையான விளக்கத்தை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக