ஆண்ட்ராய்டு
கோ பதிப்பானது அசல் ஆண்ட்ராய்ட் பதிப்பில் இருந்து டோன் டவுன்
செய்யப்பட்டவையாகும். ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பின் வெளியீட்டில் கூகுள் பல
தீர்வுகளை கொண்டு வரப்பார்க்கிறது. நிறுவனத்தின் தகவல் படி, ஆண்ட்ராய்டு 12
கோ பதிப்பானது, கோ எடிஷன் முந்தைய பதிப்புகளை விட 30% வேகமாக
ஸ்மார்ட்போன்களில் பயன்பாடுகளை அறிமுகம் செய்ய முடியும்.சமீபத்திய வளர்ச்சியாக, ஆண்ட்ராய்டு 12-ன் டோன் டவுன் பதிப்பாக இருக்கும். ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பு அறிமுகத்தை கூகுள் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பு ஆனது ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்புக்கு அடுத்ததாக செயல்படும். இது அதற்கு அடுத்தப்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பதிப்பானது மிதமான வன்பொருளுடன் வரும் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்தப்படும். இதுகுறித்து கூகுள் தகவலின்படி, கோ பதிப்பின் சமீபத்திய பதிப்பு திறம்பட வேகமாகவும், சிறந்ததாகவும், தனியுரிமைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோன் டவுன் செய்யப்பட்ட பதிப்புஆண்ட்ராய்டின் கோ எடிஷன் பதிப்புகள், அசல் ஆண்ட்ராய்டில் இருந்து டோன் டவுன் செய்யப்பட்டவையாகும். இது ஸ்மார்ட்போனில் பேக் தேர்வு செய்யும் போது குறைவான பிளாஸ் டிஸ்ப்ளே நேரத்தை வழங்கும். சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷனில் கூகுள் ஸ்ப்ளாஷ் ஸ்க்ரீன் ஏபிஐ-ஐப் பயன்படுத்துகிறது. இதன் காட்சி மென்மையான அனிமேஷன்களுக்கு உதவும். பயனர் அனுபவத்தை மேம்படுத்த உதவும் அனிமேஷனை பயனர்கள் இதன்மூலம் காண்பார்கள். ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை சேமிக்கவும், ஸ்மார்ட்போனின் இடத்தை மிச்சப்படுத்தவும் உதவுகிறது. அதாவது ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பில் சிறிது காலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆப்ஸ்களை ஸ்லீப்பிங் மோட்-ல் வைக்க அனுமதிக்கிறது. ஸ்மார்ட்போன்களில் ஸ்லீப்பிங் மோட் செயல்படுத்தும் சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட தனியுரிமைக் கொள்கைஅதேபோல் தற்போது ஆண்ட்ராய்டின் வழக்கமாக பயன்படுத்தப்படும் பதிப்புகள் ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பில் இடம்பெறும். பயனர்கள் தங்கள் டிஸ்ப்ளேவில் உரைகளை மொழிபெயர்க்க முடியும். சமீபத்திய மெனுவில் இந்த அம்சத்தை பெற முடியும். சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 கோ பதிப்பானது மேம்படுத்தப்பட்ட தனியுரிமைக் கொள்கைகளையும் கொண்டு வரும். பயனர்கள் தற்போது தனியுரிமை டாஷ்போர்டை பயன்படுத்துவார்கள், இது இருப்பிடம், மைக்ரோஃபோனில் இருந்து வரும் ஒலி, கேமராவின் உள்ளடக்கம் போன்ற முக்கியமான தரவுகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும். கூகுள் வழங்கும் சமீபத்திய பதிப்பானது 2022-ல் வரும் என கூறப்படுகிறது. இதன் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் விவரமாக தெரியவில்லை.
ஆண்ட்ராய்டு அப்டேட் எப்போது வரும் என்பது பலரின் பேசு பொருளாகவே இருந்தது. காரணம் சமீபத்திய ஓஎஸ் அப்டேட்டில் புதுவித அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க பயனர்கள காத்திருந்தனர். கூகுள் சமீபத்தில் ஆண்ட்ராய்டு 12 பீட்டா பதிப்பை பொது பதிவிறக்கத்திற்காக வெளியிட்டது. இதில் இருந்த பல பிழைகள் மற்றும் பிற குறைபாடுகளை சரி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தற்போதே ஆண்ட்ராய்டு 12 பீட்டா பதிப்பை சில எளிய முறைகள் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 பீட்டா டவுன்லோட் செய்வதற்கு முன்னதாக தங்களது சாதனம் அதற்கு தயாரானதா என்பதை சரிபார்த்துக் கொள்வது அவசியம். ஆண்ட்ராய்டு 12 பீட்டா பதிப்பை பெறுவது என்பது மாடலுக்கு மாடல் மாறுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் தனியுரிமை மைய அம்சங்களுக்கு பெரும் பாதுகாப்புடனான புதிய அம்சங்களை கொண்டு வருகிறது. மேலும் முகக் கட்டுப்பாடுகள் போன்ற அம்சங்களை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் கூகுள் அணுகல் தொகுப்பு பயன்பாட்டையும் மேம்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் தங்கள் சாதனத்தில் அதிக மறுமொழி விகிதம் மற்றும் உகந்த பேட்டரி பயன்பாட்டை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆண்ட்ராய்டு 12 அப்டேட்சிபியூ கோர் சிஸ்டம் நுகர்வு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தொடுதல்கள் அனைத்தும் புதிய ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டின் புதிய பகுதியாகும். பீட்டா புதுப்பிப்பு தொடர்ந்து வெளிவருவதன் காரணமாக நிலையான ஆண்ட்ராய்டு 12 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக