
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்பெஷல் எடிசன்களையும், லிமிடெட் எடிசன்களையும் அவற்றின் தயாரிப்பு மாடல்களில் கொண்டுவருவது வழக்கம். இந்த வகையில் தான் தற்போது புதிய ஆக்டிவா பிரீமியம் எடிசனை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேட் ஷேடில் பிரத்யேகமான காப்பர் மெட்டாலிக் உடன் பேர்ல் அமேசிங் வெள்ளை மற்றும் மேட் ஏர்ல் சில்வர் மெட்டாலிக் உடன் மேட் இரும்பு கருப்பு என்ற இரு நிறத்தேர்வுகளில் இந்த ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.78,725 மற்றும் ரூ.82,280 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் நிர்வாக இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கூறுகையில், மில்லியன் கணக்கான இந்தியர்கள்களுக்கு உண்மையான துணையாக, ஆக்டிவா நாடு முழுவதும் உள்ள 2-வீலர் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துள்ளது.
ஆக்டிவா 125 பிரீமியம் எடிசனின் அறிமுகத்துடன், தனித்துவமான டிசைன் குறிப்புகள் மற்றும் வண்ண திட்டங்கள் மூலம் ஒரு நேர்த்தியான மற்றும் பிரீமியம் பாணியை நாங்கள் கொண்டு வருகிறோம் என்றார். இந்த புதிய ஸ்பெஷல் எடிசனில் கொண்டுவரப்பட்டுள்ள காஸ்மெட்டிக் அப்டேட்களை பொறுத்தவரையில், இரட்டை-நிற பெயிண்ட் திட்டுத்திட்டாக ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கூட்டரில் முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் இருக்கை அமைப்பு கருப்பு நிறத்திலேயே தொடர்ந்துள்ளன. இரட்டை-நிறம் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்க முனைப்பகுதியில் பின் இருக்கை பயணி பிடித்து கொள்வதற்கான க்ராப் ரெயில்கள் கருப்பு நிறத்தில் இல்லாமல், ஸ்கூட்டரின் நிறத்திலேயே உள்ளது.
இவை எல்லாவற்றையும் விட கிராஃபிக்ஸ், இதுதான் இந்த ஸ்பெஷல் எடிசனை வழக்கமான ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருந்து வேறுப்படுத்தி காட்டுகிறது. ஆக்டிவா 125 பிரீமியம் எடிசனின் அறிமுகம் குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓ-வுமான அட்சுஷி ஒகடா பேசுகையில், அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, ஆக்டிவா பிராண்ட் மாற்றத்தின் உண்மையான கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறது.
வரலாற்று ரீதியாக, ஆக்டிவா குடும்பத்தில் ஒவ்வொரு புதிய சேர்க்கையிலும், தயாரிப்பு தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஹோண்டா அதன் தலைமையை தொடர்கிறது. புதிய ஆக்டிவா 125 பிரீமியம் எடிசன் அதன் பிரீமியம் வளர்ச்சியுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்திய சந்தையில் பிரபலமான ஸ்கூட்டர்களுள் ஹோண்டா ஆக்டிவாவும் ஒன்று. ஒன்று என சொல்வதை காட்டிலும், நம் நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆக்டிவா தான். ட்ரம், ட்ரம் அலாய் மற்றும் டிஸ்க் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.74,787 என உள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124.9சிசி, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8.52 பிஎச்பி மற்றும் 10.54 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் வி-மேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. குறைவான எடை கொண்டதாக விளங்கும் ஆக்டிவா ஸ்கூட்டரின் சவுகரியமான ரைடிங் நிலைப்பாடு முக்கியமான சிறப்பம்சமாக விளங்குகிறது.
இதுவே பல லட்ச வாடிக்கையாளர்களை ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் பக்கம் கவர்ந்திழுக்கிறது. இந்த ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் ப்ரேக்கிங் பணிக்கு முன்பக்கத்தில் 130மிமீ-இல் ட்ரம் ப்ரேக்குகளும், பின்பக்கத்தில் 190மிமீ-இல் டிஸ்க் ப்ரேக்குகளும் (கூடுதல் தேர்வு) வழங்கப்படுகின்றன. இதன் அனைத்து வேரியண்ட்களிலும் இணைப்பு-பிரேக் அமைப்பு கொடுக்கப்படுகிறது. ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 36,000 கிமீ/ 3 வருட உத்தரவாதங்களை ஹோண்டா வழங்குகிறது.
ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு சந்தையில் விற்பனையில் ஹோண்டா டியோ, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ், டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. முன்னதாக கடந்த டிச.4 & 5ஆம் தேதிகளில் நடைபெற்ற 2021 இந்தியா பைக் வாரம் கண்காட்சியில் ஹோண்டா அதன் தயாரிப்புகளாக ஹைனெஸ் சிபி350 முதலாம் ஆண்டுநிறைவு எடிசன் மற்றும் பிஎஸ்6 சிபி300ஆர் பைக்குகளை அறிமுகப்படுத்தி இருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக