Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 16 டிசம்பர், 2021

மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த பேடிஎம்.. 13% வீழ்ச்சி.. என்ன காரணம்..!

பேடிஎம் வீழ்ச்சி

பேடிஎம் ஐபிஓ-வை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் தினமே 28% வீழ்ச்சியினை கண்டது.அதன் பிறகு பெரியளவில் சரிவினைக் காணாவிட்டாலும், பெரியளவில் ஏற்றமும் காணவில்லை.

ஆரம்பத்தில் பங்கு சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரியளவிலான பொதுப்பங்கு வெளியீட்டினை செய்த பேடிஎம் என்ற பெருமை, இந்த பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் முன்பு வரையில் இருந்தது.

பேடிஎம் வீழ்ச்சி

ஐபிஓ-வில் வாங்காமல் நல்ல வாய்ப்பினை மிஸ் செய்துவிட்டோமோ என்ற கவலை இருந்தது. ஆனால் பட்டியலிடப்பட்ட அந்த நிமிடத்தில் அப்பாடா தப்பித்தோம் என நினைக்க வைத்து விட்டது எனலாம். இப்படி பற்பல சிக்கல்களுக்கு மத்தியில் இருந்து வந்த பேடிஎம், இன்று மீண்டும் 13% சரிவினைக் கண்டுள்ளது.

இன்று பேடிஎம் சரிவு

இந்த பங்கின் விலையானது பங்கு வெளியீட்டில் 2150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தொடக்கத்தில் 1,296 ரூபாயாக தொடங்கியது. இதற்கிடையில் தற்போது 6% மேலாக சரிவினைக் கண்டு, 1401.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

பங்கினை வாங்கலாம்

இது பேடிஎம் நிறுவனத்தின் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான லாகின் காலம் முடிவடைந்த நிலையில், இதன் பங்கு விலையானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் பேடிஎம் பங்கு விலையானது குறைந்த லெவலில் உள்ள காரணத்தினால், முதலீட்டாளர்கள் வாங்க ஆர்வம் காட்டலாம். இதற்கிடையில் இப்பங்கு விலையானது 1300 - 1700 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என நிபுணர்கள் தொடலாம். இதனை தாண்டியும் 1700 என்ற லெவலில் காணப்பட்டால் மேற்கொண்டு ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சப்போர்ட்

பேடிஎம் நிறுவனத்தின் முக்கிய சப்போர்ட் லெவல்களாக 1200 - 1300 ரூபாயாக உள்ளது. இதே அந்த பேடிஎம் ஐபிஓ வெளியிடப்பட்ட சமயத்தில் வெளியிடப்பட்ட மற்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. எனினும் பேடிஎம்மின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையானது மிகப்பெரியளவில் உள்ளது. எதிர்காலத்தில் வலுவானதொரு வளார்ச்சியினை உருவாக்க உதவிகரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதற்கு இன்னும் சில காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக