Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 24 டிசம்பர், 2021

சீனாவில் லாக்டவுன்.. 1.3 கோடி மக்கள் வீட்டில் முடங்கினர்.. தொழிற்சாலைகளுக்கு பூட்டு..!

 Xi'an மாகாணம்

உலக நாடுகள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் சீனா தனது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரித்து மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்ட வேளையில், சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அந்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

சீனாவின் மேற்கு பகுதியில் இருக்கும் Xi'an மாகாணத்தில் கொரோனா பரவி வரும் வேளையில் இப்பகுதியில் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளது.
 
Xi'an மாகாணம்

சீனாவின் Xi'an பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமான காரணத்தால் சீனா அரசு அப்பகுதியில் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பு மூலம் இப்பகுதியில் இருக்கும் 1.3 கோடி மக்கள் வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மக்கள் வீட்டில் முடக்கம்

மேலும் இப்பகுதியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகள், வர்த்தக அமைப்புகள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ள காரணத்தால் மக்கள் வருமானம் இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல்

சீன அரசு செய்தி அமைப்புக் கூறுகையில் Xi'an மாகாணத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மக்கள் முக்கியமான காரணத்திற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், இல்லையெனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

போக்குவரத்துத் துண்டிப்பு

இதுமட்டும் அல்லாமல் Xi'an பகுதியிலும், பெரு நகரங்களில் இருந்து Xi'an பகுதிக்குமான போக்குவரத்து அனைத்தையும் சீன அரசு தடை செய்துள்ளது. மேலும் ஒரு வீட்டுக்கு ஒருவர் அடிப்படையில் 2 நாட்களுக்கு ஒருமுறை வீட்டை விட்டு வெளியே வந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

52 பேருக்கு கொரோனா

Xi'an பகுதியில் 24 மணிநேரத்தில் சுமார் 52 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகச் சீன அரசு புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2020 முதல் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகள் உடன் கொரோனா தொற்று பரவலைத் தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

இதற்கிடையில் சீனாவில் வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளது, இதற்கான பணிகள் வேகமெடுக்கத் துவங்க உள்ள நிலையில் Xi'an பகுதியில் ஏற்பட்டு உள்ள கொரோனா தொற்று இப்போட்டியைப் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளும் கொரோனா தொற்றுக் காரணமாகத் தான் காலதாமதமாகத் துவங்கப்பட்டது.

இந்தியா

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் திட்டமிட்டு வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் ஒமிக்ரான் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு

தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. ஓமிக்ரான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தற்போது 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக