Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 14 டிசம்பர், 2021

இலங்கையில் கிடைத்த 300 கிலோ எடை கொண்ட நீலக்கல்! விரிவான பின்னணி


Queen of Asia: இலங்கையில் கிடைத்த 300 கிலோ எடை கொண்ட நீலக்கல்! விரிவான பின்னணி

300 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ஆசியாவின் ராணி என்ற உலகின் மிகப்பெரிய நீலக்கல் தொடர்பான தகவலை இலங்கை வெளியிட்டது. தலைநகர் கொழும்பில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள ரத்தன்புரா (Ratnapura) நகரத்தில்  உள்ள சுரங்கத்தில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த அரிய ரத்தினக் கல் கண்டெடுக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய இயற்கையான நீல சபையர் (largest natural corundum blue sapphire), சுமார் 310 கிலோ எடையுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) வெளியிடப்பட்டது. இந்த ரத்தினக் கல்லுக்கு "ஆசியாவின் ராணி" என்று பெயரிடப்படப்பட்டுள்ளது. 

இலங்கை அரசின், தேசிய ரத்தினம் மற்றும் ஆபரண ஆணையம் (The National Gem and Jewellery Authority), இந்த நீல சபையர் கல், மிகவும் மதிப்புமிக்க ரத்தினக் கல் என்ற சான்றளித்துள்ளது. இந்த மதிப்புமிக்க ரத்தினக்கல், சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.  சர்வதேச ரத்தின நிறுவனங்கள் இன்னும் இந்த விலையுயர்ந்த ரத்தினக் கல்லுக்கு சான்றளிக்கவில்லை.

எனவே, இந்த ரத்தினக்கல் தொடர்பாக மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க (Thilak Weerasinghe) தெரிவித்துள்ளார்.

சுரங்கத்திற்கும் மேலும் பல சுத்தமான ரத்தினக் கற்கள் இருக்கக்கூடும். எனவே சுரங்கத்திலும் மேலும் தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 

அலுமினியம் ஆக்சைடு, டைட்டானியம், இரும்பு, நிக்கல் (aluminum oxide, titanium, iron, and nickel) உள்ளிட்டவை ரத்தினக் கல்லில் உள்ளதே இதன் சிறப்பு என ரத்தின நிபுணர் சமிலா சுரங்கா (Chamila Suranga) தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த ரத்தினக் கல்லை சர்வதேச சந்தையில் அதிக தொகைக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதம், உலகின் மிகப்பெரிய சபையர் கிளஸ்டரும் (largest star sapphire cluster) ரத்தினபுராவில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சுமார் 510 கிலோ காரட் எடையுள்ள அந்த ரத்தின கிளஸ்டருக்கு "செரண்டிபிட்டி சபையர்" (Serendipity Sapphire) என்று பெயரிடப்பட்டது. தண்ணீருக்காக கிணறு தோண்டும்போது செரண்டிபிட்டி ரத்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக