குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் ஹீரோவாக அறிமுகமாகும் என்ன சொல்ல போகிறாய்
படம் ஜனவரி மாதம் ரிலீஸாகவிருக்கிறது. படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய
திட்டமிட்டனர். இந்நிலையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வினோ,
நான் 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன்.
கதை
பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என்றார். அதனால் பெரும் சர்ச்சை
ஏற்பட்டது. அவர் பேச்சால் தான் என்ன சொல்ல போகிறாய் ரிலீஸ் தள்ளிப் போனதாக
கூறப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் ஒருவரை அஸ்வின் காக்க வைத்தது
தெரிய வந்திருக்கிறது. இயக்குநர் ஒருவர் பெரிய தயாரிப்பு நிறுவனத்தை அணுகி
கதை சொல்ல அவர்களோ, அஸ்வினை ஹீரோவாக போடலாம், அவரிடம் பேசுங்கள்
என்றார்களாம்.
சென்னையில்
இருக்கும் பெரிய ஸ்டார் ஹோட்டலில் அதுவும் குறிப்பிட்ட அறையில் வைத்து
தான் கதை கேட்பேன் என்றாராம் அஸ்வின். சரி என்று, அறையை புக் செய்து
இயக்குநரை அனுப்பி வைத்தால் அஸ்வின் வரவே இல்லையாம்.
நாள் முழுக்க காத்திருந்த இயக்குநர் அஸ்வினை தொடர்பு கொண்டபோது, எனக்கு கதை கேட்கும் மூட் இல்லை. நாளை வந்து சொல்லுங்கள் என்றாராம். இதை
இயக்குநர் தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். கதை கேட்கவே மூடு இல்லையா,
அந்த ஆளே வேண்டாம், நாம் வேறு ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பு
தரப்பு கூறிவிட்டதாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக