Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 16 டிசம்பர், 2021

ஓஹோ., அப்படியா., போட்டினா போட்டிதான்- விஐ அறிமுகம் செய்த 4 புதிய திட்டங்கள்: குறைந்த விலை அதிக டேட்டா!

 வோடபோன் ஐடியா (விஐ)

வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம் நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டமானது ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 என்ற விலையில் அறிகும் செய்துள்ளது.

வோடபோன் ஐடியா (விஐ)

வோடபோன் ஐடியா (விஐ) அதன் பயனர்களுக்கு நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டங்களான ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 ஆனது நிறுவனத்தின் இணையதளத்தில் தற்போதே பிரதிபலிக்கிறது. வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனமானது ரூ.250-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.250-க்கு கீழ் திட்டங்கள் சிறந்த திட்டங்கள் தேடும் பயனர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என கருதப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வு அறிவித்த பிறகு பயனர்கள குறைந்த விலை திட்டங்களை அலசி ஆராய்ந்து வருகின்றனர். அவர்களை பூர்த்தி செய்யும் வகையில் வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம் திட்டங்களை அறிவித்துள்ளது. வோடபோன் ஐடியா (விஐ) வழங்கும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்களை பார்க்கலாம்.

ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 என்ற விலை திட்டம்

வோடபோன் ஐடியா (விஐ) ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 என்ற விலையில் புதிய நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களின் தேர்வுக்கு ஏற்ப இரண்டு புதிய திட்டங்களை ரூ.250-க்கு கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ரூ.155, ரூ239 என்ற விலையில் கிடைக்கிறது. விஐ நான்கு புதிய திட்டங்களில் வழங்கும் சலுகைகளின் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்

வோடபோன் ஐடியா (விஐ) ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 என்ற விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. வோடபோன் ஐடியா (விஐ) ரூ.155 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும், வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகைகள் உடன் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் விஐ வழங்கும் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு 24 சேவையை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும், அதேபோல் தினசரி 1 ஜிபி டேட்டாவையும் வரம்பற்று கரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

தினசரி 1.5 ஜிபி டேட்டா

வோடபோன் ஐடியா (விஐ) அடுத்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமானது ரூ.666 என்ற விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் பிங்கே நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதி மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகை ஆகியவற்றை வழங்குகிறது. விஐ வழங்கும் ரூ.666 திட்டமானது 77 நாட்களுக்கு சேவையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் விஐ மூவிஸ் மற்றும் டிவி விஐபிக்கான இலவச அணுகலை வழங்குகிறது.

தினசரி 3 ஜிபி டேட்டா

வோடபோன் ஐடியா சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரூ.699 திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா ம்ற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகையை வழங்குகிறது. பிங்க் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் போன் கூடுதல் சலுகைகள் இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகள்

உலக அளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் பல்வேறு பிரிவு நிறுவனங்களும் தங்களை நிலைநிறுத்தி வளர்ச்சியடையச் செய்ய போராடி வருகின்றன. இதில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விதிவிலக்கு அல்ல. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க குரல் அழைப்புகள், டேட்டா சேவை முதல் ஓடிடி அணுகலை வழங்கி வருகின்றன.

60 சதவீதம் பேர் மொபைல் இணையம் பயன்படுத்துகின்றனர்

இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 60 சதவீதம் பேர் மொபைல் இணையத்தை பயன்படுத்துவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து விலை உயர்வை அறிவித்து வருகின்றன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு டிராய் என்ன பதில் அளிக்கப்போகிறது என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. மறுபுறம் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பெரும் நஷ்டம் ஏற்படுவதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை அதிகரிப்பு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து வருகின்றன.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ)

கட்டண உயர்வுக்கு எதிராக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா (விஐ) வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரவித்து வருகின்றனர். ஜியோ அறிமுகமான குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தது. அதற்கு காரணம் ஜியோ குறைந்த விலையில் ஏணைய சலுகைகளை வழங்கியதே ஆகும். ஜியோ இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வுக்கு பலரும் மீம்ஸ்கள் மூலம் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மாற்று நிறுவனத்தை தேடும் பயனர்கள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வுக்கு பலரும் மீம்ஸ்கள் மூலம் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் பிஎஸ்என்எல்-ஐ நோக்கி செல்வது நல்லது என கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து மீம்ஸ்களும் கருத்துகளும் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் சிலர் பிஎஸ்என்எல் இணைய வேகத்தை முழுமையாக வழங்கினால் சிறப்பாக இருக்கும் என கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் தெரிவித்த சில மீம்ஸ்களை முழுமையாக காட்டப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக