Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 டிசம்பர், 2021

லாட்டரியில் விழுந்த 50 கோடி பரிசு... மயக்கம் போட்டு விழுந்த டாக்டர்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்..!!
--------------------------------------------------------

ரமேஷ் : உங்க கதை உப்புச் சப்பே இல்லாம, ரொம்ப சுமாரா இருக்கு!
எழுத்தாளர் : நான் உங்களைக் கதையைப் படிக்கத்தானே சொன்னேன், நீங்க ஏன் அதைச் சாப்பிட்டீங்க?
ரமேஷ் : 😏😏
--------------------------------------------------------
பாபு : அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போல் இருக்கு.
கோபு : எப்படி சொல்றீங்க?
பாபு : வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே.
கோபு : 😆😆
--------------------------------------------------------
சில யதார்த்தங்கள்!!
--------------------------------------------------------
💫 நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே,
அதற்காக நேர்மையை கை விட்டு விடாதே..

💫 அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யும்போது இனிமையாகத்தான் இருக்கும்..
அதுவே உனக்கு வரும்போது தான் அதன் வலியும், வேதனையும் புரியும்..!!

💫 ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்..
அவனை விட்டு விலகியே இரு..!!
எல்லோரிடமும் நட்பாய் இரு..
நமக்கும் நாலு பேர் தேவை..!!
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது !!
--------------------------------------------------------
90 வயதான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடும்பத்தினர் இந்த விஷயத்தை அவரிடம் எப்படி சொல்வது? திடீர்னு சொன்னா ஒருவேளை அதிக சந்தோஷத்துல.. 'பொசுக்குன்னு போய்ட்டார்னா" யோசனை செஞ்சு பாத்துட்டு, ஒரு டாக்டர் கிட்ட போனாங்க..

விஷயத்தை கேட்ட டாக்டர் 'ஒ.. அவ்வளவுதானே... நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க நா பாத்துக்கிறேன்" எப்படி.. அவர பக்குவமா பேசி.. நான் சரி பண்றேன்னு மட்டும் பாருங்க.... பேசி மடக்குரதுல நான் பெரிய எக்ஸ்பர்ட் ஆச்சே..

ஊர்க்கதை எல்லாம்.. பேசிட்டு மெல்லமா 'ஐயா ஒரு பேச்சுக்கு கேட்குறேன்.... உங்களுக்கு லாட்டரியில 50 கோடி விழுந்தா என்ன பண்ணுவீங்க...."

அதுக்கு அந்த வயதானவர், என்ன.. டாக்டர் சார் இப்படி கேட்குறீங்க.. நீங்க ஆஸ்பிட்டல் கட்டுரீங்க இல்லையா.. உங்களுக்கு ஒரு ஐம்பது லட்சத்தை.. தூக்கிக் கொடுப்பேன்..

படார்னு ஒரு சத்தம்.. இத கேட்ட டாக்டர் மயக்கம்போட்டு விழுந்திட்டாரு.. பிறகு எழுந்திருக்கவே இல்ல.
--------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக