Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 14 டிசம்பர், 2021

பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஐடியா: ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்: என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. குறிப்பாக இந்நிறுவனங்கள் 20 சதவிகிதம் வரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை குறைவான விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகின்றன. மேலும் இந்தமூன்று நிறுவனங்களுமே ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல்உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் Amazon Prime வீடியோவின் இலவச சோதனைக்கான அணுகல், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினிசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளுக்கான அணுகல் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட்திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவசபிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. மேற்கூறிய நன்மைகளுடன், BSNL நிறுவனம் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 4ஜி சேவையை முழு வீச்சில் அறிகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்ல4ஜி சேவையை அறிமுகம் செய்தால் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக