Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 16 டிசம்பர், 2021

சிப்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்த ரூ.76,000 கோடி ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு!! சரியான நேரத்தில், சரியான முடிவு!

சிப்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்த ரூ.76,000 கோடி ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு!! சரியான நேரத்தில், சரியான முடிவு! 
அடுத்த 6 ஆண்டுகளில் குறைக்கடத்திகள், டிஸ்பிளே உள்ளிட்டவற்றை இந்தியாவில் தயாரிக்க சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறையை சில மாதங்களுக்கு பாதிக்க, அதன் நீட்சியாக கொரோனா இரண்டாவது அலையால் இந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் சில வாரங்களுக்கு, சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொழிற்சாலைகளும், விற்பனை மையங்களும் மூடப்பட்டன.

இதனால் எதிர்பார்த்ததை போல் இந்த ஆண்டிலும் சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனையில் பலத்த சறுகலை கண்டுள்ளன. கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்புகள் இத்துடன் நின்றுவிடவில்லை. ஊரடங்குகள் நம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக மற்ற தயாரிப்புகளை போல், தற்கால மாடர்ன் ஆட்டோமொபைல் துறைக்கு முக்கிய தேவைகளுள் ஒன்றாக விளங்கும் குறைக்கடத்தி பாகங்களுக்கு உலகளவில் பற்றாக்குறை ஏற்பட்டது.

இது இந்திய ஆட்டோமொபைல் துறையிலும் எதிரொலிக்க, இதன் விளைவாக வாகன விற்பனை நம் நாட்டில் கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருவதை பார்த்து கொண்டுதான் வருகிறோம். ஏனெனில் மாருதி சுஸுகி போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் கூட தேவைக்கு ஏற்ப கார்களை தயாரிக்க முடியாமல் கடந்த செப்டம்பரில் இருந்து போராடி வருகிறது.

இத்தகைய தடைகள் புதிய வாகனங்களின் அறிமுகங்களை தாமதப்படுத்துகின்றன. இதை எல்லாம் மனதில் வைத்தே உள்நாட்டில் குறைக்கடத்திகள் தயாரிப்பை ஊக்குவிக்க ரூ.76 கோடியை ஒன்றிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. டெல்லியில், மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினர்.

அப்போது, குறைக்கடத்திகள், டிஸ்பிளே ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரித்துள்ளார். குறைக்கடத்திகள் தயாரிப்பை அடுத்த 5-6 ஆண்டுகளில் உள்நாட்டில் அதிகப்படுத்தும் நோக்கில் இந்த ஊக்கத்தொகை ஒன்றிய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த 2020 நவம்பரில், இந்தியாவில் வூ எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடியில், சுருக்கமாக PLI எனப்படும் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

PLI திட்டமானது ஆட்டோமொபைல் உற்பத்தி, வாகன உதிரிபாக உற்பத்தி மற்றும் மின்சார வாகன சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குபவர்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் சமீபத்திய உள்நாட்டு குறைக்கடத்திகள் தயாரிப்பை அதிகப்படுத்தும் முடிவை பற்றிய பேசிய ஒன்றிய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழிற்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இது மைக்ரோ சிப்களை வடிவமைக்கவும், உருவாக்கவும், பேக்கிங் செய்யவும் மற்றும் சோதனை செய்யவும் என முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும் என்றார்.

இந்தியாவில் சிப் உற்பத்திக்கான இந்த பிஎல்ஐ திட்டம் நாட்டின் வாகனத்துறைக்கு கணிசமாக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற உலகளாவிய வாகன துறைகளை போலவே, இந்திய வாகன துறையும் கோவிட்-19 தொற்றுநோயால் உருவான சிப் பற்றாக்குறையால் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருவதாக ஏற்கனவே கூறிவிட்டோம்.

கடந்த ஆண்டில் ஊரடங்குகளுக்கு பிறகு மெல்ல மெல்ல ஆட்டோமொபைல் துறை செயல்பட ஆரம்பித்ததை அடுத்து, பைக்குகள் & கார்கள் போன்ற தனிப்பயன்பாட்டு வானங்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியது. இதனால் வாகனங்களில் பொருத்தப்படும் மைக்ரோ சிப்களுக்கான தேவை கணிசமாக அதிகரிக்க, இந்த அதிகப்படியான தேவையை சில குறைக்கடத்தி உற்பத்தியாளர்களால் பூர்த்தி செய்ய முடியாததால், இது நாளுக்கு நாள் பெரிய தலைவலியாக மாறியது.

அப்போதில் இருந்து ஆட்டோமொபைல் துறை மற்றும் பிற தொடர்புடைய துறைகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய உள்ளூர் சிப் உற்பத்தி தொழிற்சாலைகளை உருவாக்குவது பற்றி விவாதங்கள் நடந்தன. மைக்ரோ சிப் உற்பத்தி துறைக்கு புதிதாக அங்கரீக்கப்பட்ட பிஎல்ஐ திட்டத்துடன், இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைக்கடத்தி உற்பத்திக்கான பிஎல்ஐ திட்டத்தின் நேரம் மிகவும் முக்கியமானது.

ஏனெனில் உலகெங்கிலும் உள்ள கார்பிரேட் நிறுவனங்கள் குறைக்கடத்திகள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நேரத்தில் இந்த திட்டம் பல மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய தேவைகளை தீர்க்கும் அளவிற்கு இல்லையென்றாலும், குறைந்தது உள்நாட்டு தேவைகளை தீர்க்கவாவது நம் நாட்டில் குறைக்கடத்தி தயாரிப்பு நிறுவனங்கள் விரைவாக, புதியதாக உருவாக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக