
அமெரிக்காவினை சேர்ந்த பிரபல நிறுவனமான பெட்டர் காம் ஒரே ஒரு ஜும் காலில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது குறித்து வெளியான செய்தியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் கார்க், சந்தையின் செயல் திறன், ஊழியர்களின் செயல் திறன், உற்பத்தி திறன் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இதனை நீங்கள் கேட்க விரும்ப மாட்டீர்கள். நீங்கள் இந்த ஜும் காலில் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர். நீங்கள் தற்போதிலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகின்றீர்கள். உடனடியாக இப்போதிலிருந்தே பணி நீக்கம் செய்யப்படுகின்றீர்கள் என்று 43 வயதான விஷால் கார்க் தெரிவித்துள்ளார்.
பெட்டர்.காமின் மொத்த ஊழியர்களில் 9% பேர் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். இதற்கிடையில் இந்த குழுவில் உள்ள ஒரு ஊழியர் படம் பிடித்து சமூகம் ஊடகங்களில் இதனை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே அங்கு விடுமுறைக்கு முன்னதாகவே இந்த பிரச்சனை அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஜும் காலில் 900 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பினை கொடுத்த விஷால், இது என் கேரியரில் செய்யும் இரண்டாவது பணி நீக்கமாகும். இதனை நான் செய்ய விரும்பவில்லை. இனி இதுபோன்று செய்யக் கூடாது. இது தான் கடைசி முறை.
கடந்த முறை இதுபோன்று செய்யும்போது நான் அழுதேன். ஆனால் இந்த முறை நான் வலிமையாக உள்ளேன். சந்தையின் செயல் திறன், உற்பத்தி திறன் உள்ளிட்ட பல காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பணி நீக்கம் 15% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த நிறுவனம் 9% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக