Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 25 டிசம்பர், 2021

ஓலா ஸ்கூட்டர் தயாரிப்பில் புது பிரச்சனை.. டெலிவரி லேட்.. பாவிஷ் அகர்வால் கனவுக்கு தடையா..!

 5 பில்லியன் டாலர் மதிப்பீடு

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் முன்னணி நிறுவனமாகவும், ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவையில் யாரும் அசைக்க முடியாத உச்சத்தை அடைந்த ஓலா, ஆட்டோமொபைல் துறையில் இறங்க முடிவு செய்து இந்தியாவிலேயே மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையும் அமைக்கத் திட்டமிட்டார் ஓலா நிறுவனத்தின் சிஇஓ-வான பாவிஷ் அகர்வால்.

பல மாத உழைப்புக்குப் பின்பு ஓலா சமீபத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்த 100 வாடிக்கையாளர்களுக்குப் பிரம்மாண்டமான முறையில் பைக்குகளை டெலிவரி செய்தது.

ஆனால் ஓலா தொழிற்சாலையில் பல பிரச்சனைகளை அடுத்தடுத்து வெடித்து வரும் காரணத்தால் வாகனங்கள் டெலிவரி தாமதமாவது மட்டும் அல்லாமல் பாவிஷ் அகர்வால் கனவுக்குப் பெறும் தடையாகவும் மாற்றியுள்ளது

ஓலா மொபிலிட்டி நிறுவனம்

ஓலா மொபிலிட்டி நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆன்லைன் மூலம் முறை புக்கிங் பெற்ற நிலையில் 90,000 ஆர்டர்கள் குவிந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து டெலிவரி துவங்கப்படும் என ஓலா அறிவித்த நிலையில் டிசம்பர் மாதம் தான் துவங்கியுள்ளது. இந்த நிலைக்கு முக்கியக் காரணம் உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள தொய்வு தான்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அமைத்துள்ள மாபெரும் தொழிற்சாலையின் பாடி ஷாப் 50 சதவீதம் அளவில் தான் இயங்கி வருகிறது, பெயின்ட் ஷாப் இயங்குவதே இல்லை, இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஒரு நாளுக்கு வெறும் 150 வாகனங்களை மட்டுமே இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

 வாகன உற்பத்தி தொய்வு

வாகன உற்பத்தி தொய்வுக்குச் சிப் தட்டுப்பாடு ஒரு பிரச்சனையாக இருந்தாலும், பெருமளவிலான உதிரிப்பாகங்களை வெளிநாட்டுச் சந்தையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் கூடுதல் தாமதமாகிறது.

5 பில்லியன் டாலர் மதிப்பீடு

இந்தியாவில் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன பிரிவுக்குள் நுழைந்துள்ள நிலையில் மொத்த ஆட்டோமொபைல் இத்துறைகள் நுழைய வேண்டும் எனக் கூறுகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீட்டை ஈர்த்து வரும் நிலையில் ஐபிஓ-வும் வெளியிட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

பாவிஷ் அகர்வால்

இந்த நிலையில் இந்நிறுவனத்தின் சிஇஓ-வான பாவிஷ் அகர்வால்-ன் கனவு திட்டமான மாஸ் உற்பத்தியை அடைய முடியாமல் உள்ளது நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பெரும் பின்னடைவாக விளங்குகிறது.

வாடிக்கையாளர் குமுறல்

வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஓலா எலக்ட்ரிக் பைக் ஆர்டர் செய்து பல மாதங்களாகப் பெற முடியாத நிலையில், பைக்-ஐ புக் செய்தவர்கள் தங்களது வருத்தத்தைத் தொடர்ந்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக