இந்த கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு சீதளா தேவி திருக்கோயில், சென்னையில் உள்ள மடிப்பாக்கத்தில் உள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மடிப்பாக்கம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மடிப்பாக்கத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
மூலஸ்தானத்தில் அன்னை சீதளா தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள். நிலவு போன்ற குளிர்ச்சி மிக்கவள் என்பதால் சீதளா தேவி என திருநாமம் கொண்டாள். சாந்நித்யம் மிக்க சந்நிதி.
இவ்வலாயம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, ஒரு பாம்பின் வடிவில் மூலஸ்தானத்திற்கு வந்து அமர்ந்தாள். சீதளா தேவியின் சாந்நித்யம் கிடைத்து விட்டதாக கருதி, விரைவாக கோவிலை கட்டி முடித்து, கும்பாபிஷேகம் செய்தனர்.
மிகவும் அழகே உருவான தெய்வீக மணத்துடன், பக்தர்களின் துயர் துடைக்க காட்சி தரும் அம்பிகையின் பேரழகை காண, கண்கோடி வேண்டும்.
சீதளா தேவியானவள், கன்னிகா ஸ்வரூபிணியாக திகழ்பவள். அவள் தன் தலையில் முறத்தை மகுடமாக அணிந்து, ஒரு கையில் அமிர்தத்தை கொண்டவளாகவும், வேப்பிலையை கொண்டவளாகவும் விளங்குகிறாள். வேப்பிலை ஆயுர்வேத சித்தா வைத்தியத்தில், ஓர் முக்கியமான மருந்து பொருளாக உள்ளது, அவள் எல்லா நோய்களையும் தீர்க்கக்கூடியவள் என்பதை நிரூபிக்கிறது.
வேறென்ன சிறப்பு?
தினமும் ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை போன்ற பூஜை முறைகளை, மிக சிறப்புடன் உலக மக்கள் நலனுக்காகவும், பக்தி சிரத்தையுடன் செய்து வருவதால், இன்று இந்த ஊர் மிகவும் புகழ்வாய்ந்து, தினமும் பல நூறு மக்கள் அம்மனின் அருள்பெற்று, சௌக்கியமாக வாழ்கின்றனர் என்றால், அது சீதளா தேவியின் கருணையால் தான்.
இங்கு சீதளா தேவி, 64 வகையாக உஷ்ண மற்றும் குளிர்ச்சியால் வரக்கூடிய, சகல விதமான நோய்களையும் அழிப்பதுடன், பக்தர்கள் தான் விரும்பும் வரத்தை தரக்கூடிய தயாநிதியாக விளங்குகிறாள்.
கோயிலின் வடக்கு திசை நோக்கி சீதளா அம்மன், பிள்ளையார், பால முருகனும், கிழக்கு திசையை நோக்கி, சொர்ண மகாலட்சுமி, ராகு, கேதுவும், மேற்கு திசையை நோக்கி வீர ஆஞ்சநேயரும், தென் திசையை நோக்கி தென்முகக்கடவுள் தட்சிணாமூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
இங்கு தினந்தோறும் விசேஷம் தான். அதிலும் குளிர்ந்த நாயகிக்கு, பௌர்ணமின்று மிகவும் சிறப்பாகவும் நவராத்திரி மற்றும் ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில், விசேஷ அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெற்று வருகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனை செய்யலாம்?
இங்கு வந்து சீதளாம்பிகையை வணங்கி, பிணி நீங்கி இன்பமாக வாழ்கின்றனர். இந்த கோயிலுக்கு வந்து வணக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, சுகப்பிரசவம் ஏற்படுகிறது.
கோயிலுக்கு வந்து வணக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, சுகப்பிரசவம் ஏற்படுவதால், வைத்தியரிடம் செல்வதற்கு பதில், ஒரு முறையாவது இந்த கோயிலிற்கு சென்று, அம்பிகையின் அருள்பெற்று, நோயற்ற ஆனந்த வாழ்வும், சர்வ மங்களங்களும் பெற்று, பல்லாண்டு வாழ்வார்கள் என்பது சத்தியவாக்கு.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக