இந்திய அரசுக்கு சொந்தமான விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா அதிகளவிலான கடனில் இருக்கும் காரணத்தால் இதைப் பல முறை விற்பனை செய்ய முயற்சி செய்து மத்திய அரசு தற்போது டாடா குழுமத்திற்கு விற்பனை செய்துள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளிலேயே கொச்சி விமான நிலையம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. வெளிநாட்டுப் பயணிகள் பிரிவில் இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளை அதிகளவில் இணைக்கும் விமானச் சேவைகளைக் கொச்சி விமான நிலையத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
கொச்சி மற்றும் கேரளா முழுவதும் வளைகுடா நாடுகளில் அதிகளவிலான வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கும் காரணத்தால் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. வருடம் முழுவதும் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் கொச்சி விமான நிலையம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இண்டிகோ, ஏர் இந்தியாஇண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைந்து கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஜெட்டா, துபாய், அபுதாபி, ரியாத், ஷார்ஜா, தோஹா, குவைத் போன்ற பல நாடுகளுக்கு விமானச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு முக்கியமான கொச்சி விமான நிலையத்தில் ஓரே ஓரு விமானச் சேவை நிறுவனம் தான் பங்குகளை வைத்துள்ளது, அது ஏர் இந்தியா மட்டுமே. தற்போது ஏர் இந்தியா-வை டாடா குழுமம் வாங்கும் காரணத்தால் கொச்சி விமான நிலைய பங்குகளைத் தற்போது டாடா குழுமம் பெற உள்ளது.
ஏர் இந்தியா விற்பனையில் ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இருந்த பல அரசு நிறுவனப் பங்குகள் அனைத்தும் Air India Asset Holding Limited (AIAHL)க்கு மாற்றப்பட்ட நிலையில் கொச்சி விமான நிலைய பங்குகளை மட்டுமே டாடா குழுமம் பெற உள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா வைத்திருந்த 3 சதவீத பங்குகளை டாடா குழுமம் பெற உள்ளது.
முக்கிய நிறுவனங்கள்இதன் மூலம் கொச்சி விமான நிலையத்தில் டாடா குழுமத்தைத் தாண்டி, எஸ்பிஐ, பார்த் பெட்ரோலியம், HUDCO ஆகியவை இணைந்து சுமார் 10 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதேபோல் கேரளா-வை சேர்ந்த ஒரு மசாலா வியாபாரி, மாநில வங்கி, அபுதாபி-ஐ சேர்ந்த ஒரு பில்லியனர் ஆகியோரும் கொச்சி விமான நிலையத்தில் பங்குகளை வைத்துள்ளனர்.
கொச்சி விமான நிலையத்தில் டாடா குழுமம் வைத்திருக்கும் பங்கு அளவீடு வெறும் 3 சதவீதமாக மட்டுமே இருந்தாலும், இதை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் இந்தியாவில் பிற விமான நிலையங்களை மத்திய அரசு 50 வருடம் அடிப்படையில் குத்தகைக்கு விடத் திட்டமிட்டு வரும் நிலையில் டாடா குழுமம் இதில் பங்குபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக