
ஒமைக்ரான் வைரஸ் என்ற புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது வெளி மாநிலங்களில் இருந்து விமானத்தின் மூலம் தமிழகத்திற்குள் பயணிகள் வர இ-பதிவு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு உள் நாட்டுக்குள்ளேயே பயணிகள் கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதுடன் இ பதிவு செய்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் நபர்கள் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்புகேரள மாநில மக்கள் தமிழ்நாடு வரும் போது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் கொண்டு வர வேண்டும் என இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மாநிலம் வாரியாக வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்ரிக்கா மற்றும் சில நாடுகளில் பரவி வந்த ஒமைக்ரான் எனப்படும் மோசமான கோரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
அதேபோல் சில நாட்களுக்கு முன்பு, கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் இன்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெமோவில், ஊழியர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்தியதன் விவரம் குறித்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்பு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தால் அதற்கான மருத்து ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்போம். குறிப்பாக வரும் ஜனவரி 18-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையெனில், 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அதை தொடர்ந்து சம்பளம் இல்லாத விடுப்பும் தொடர்ந்து பணி நீக்கமும் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதாக செய்திகள்வெளிவந்துள்ளன.
எனவே இதனால் தற்போது கூகுள் ஊழியர்களும் வேக்சின் செலுத்திக்கொள்ள துவங்கியுள்ளனர். கூகுள் சில நாட்களுக்கு முன்புதான் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக