Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 14 டிசம்பர், 2021

கூகுள் குரோம் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம்.!

 22 வகையான பாதுகாப்பு

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, கூகுள் குரோம் பயனாளர்கள் உடனே லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறு இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது மத்திய தொலைத்தொடர்புத்துறையின் ஒரு பகுதியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் சார்பில் கூகுள் குரோம் பயன்படும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி கூகுள் குரோமில் பல பாதிப்புகள் உள்ளதாகவும், பின்பு குறிப்பிட்ட கம்ப்யூட்டரை இலக்காக கொண்டு ரிமோட் அட்டார்கர்ஸ் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை அவர்களால் எளிதில் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையிலை இந்த சிக்கல்களை சரிசெய்ய கூகுள் நிறுவனம் ஏற்கனவே சாஃப்ட்வர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. எனவே
பயனர்கள் கூகுள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளுமாறும் இந்தியன் இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் டீம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 22 வகையான பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு குரோம் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தகவலின்படி,கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. பின்பு இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பாக இந்த புதிய வகை ரோபோ மாடல்களை ஆல்பாபெட்டின் X வடிவமைத்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் தற்போது 100 ரோபோக்கள் உலாவிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் தானியங்கு முறையில் இயங்கும் இவை Prototype- என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவை Everyday Robotsஎன்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதியவகை ரோபோ மாடல்களை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சியை மேற்கொண்டோம். பின்பு ரோபோக்களுக்கு கட்டமைக்கப்பட்ட ஒரு இடத்தில் எப்படி செயல்படுவது என்ற புரிதலை கற்றல் மூலமாக கொடுக்க முயன்றோம். அதேபோல் இதுவரையில் எங்களது ஆய்வு கூடத்தில் வலம் வந்த ரோபோக்கள், இனி அலுவலகத்தின் சில இடங்களில் வலம் வர உள்ளன என்றுதெரிவித்துள்ளார் தலைமை ரோபோ அலுவலர் Hans Peter Brøndmo. மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ரோபோ மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ரோபோக்கள் எந்த மாரியான வேலையை செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் புரோகிராம்களாக எழுதப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. எனவே இந்த புரோகிராம்களின் அடிப்படையில் அந்த ரோபோ தனக்கு கொடுக்கப்பட்ட வேலைய செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக