Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 டிசம்பர், 2021

அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி வங்கிக் கணக்கு முடக்கம் -மத்திய அரசு விளக்கம்

 அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி வங்கிக் கணக்கு முடக்கம் -மத்திய அரசு விளக்கம்

அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் தனது கவலையை தெரிவித்துள்ளார். இதனுடன் மத்திய உள்துறை அமைச்சகம் மீதும் கடுமையாக குற்றம் சாட்டை சுமத்தியுள்ளார். கிறிஸ்மஸ் அன்று மத்திய அமைச்சகம் இப்படியொரு முடிவை எடுத்திருப்பதைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மத்திய அரசின் நடவடிக்கையால் 22000 அதிகமான அந்நிறுவனத்தை நம்பி உள்ள நோயாளிகள் ,மற்றும் ஊழியர்கள் உணவு, மருந்துகள் இல்லாமல் தவித்து வருவதாக முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளை சமரசம் செய்யக்கூடாது என தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில் அனைத்து கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் காலத்தில் அனைத்து கணக்குகளிலும் பரிவர்த்தனைகளை முடிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி, இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு எல்லாம் தெரியும், நாங்கள் இதுக்குறித்து எதுவும் பேசப் போவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. அதாவது அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியால் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு தரப்பில் இருந்து முடக்கவில்லை. அந்த அமைப்[பின் சார்பில் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா"வுக்கு கடிதம் எழுதியதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

 

 

குஜராத்தில் உள்ள மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் குழந்தைகள் இல்லத்தின் மீது எஃப்.ஐ.ஆர்:

குஜராத்தில் மிஷனரிஸ் ஆப் சேரிட்டி நடத்தும் குழந்தைகள் இல்லம் ஒன்றில், அங்கு வசிக்கும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ததாகக் கூறி, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலுவை அணிவித்தும், பைபிள்களை கொடுத்தும் இந்து சிறுமிகளை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

பெண்கள் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதற்காகவும், அவர்களை பைபிளை கட்டாயம் படிக்க வேண்டும் எனக்கூறப்பட்டதாக எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், போலிஸ் அதிகாரியின் படி, மதமாற்றம் தொடர்பான குஜராத் மத சுதந்திரச் சட்டத்தின் மூன்று மற்றும் நான்கு பிரிவுகள் (தூண்டுதல் அல்லது மோசடி மூலம் யாரையும் மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 295 (A) மற்றும் 298 (மத உணர்வுகளை புண்படுத்துவது தொடர்பானது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 10 முதல் டிசம்பர் 9 வரை இந்த சம்பவங்கள் நடந்ததாக அவர் கூறினார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்றால் என்ன?

1950 இல் அன்னை தெரசா கல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா) மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியை நிறுவினார். இது ஒரு ரோமன் கத்தோலிக்க தன்னார்வ மத அமைப்பாகும், இது உலகின் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு மனிதாபிமான அடிப்படையில் தனது சேவையை செய்து வருகிறது. இது 4500 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மிஷனரிகளின் சபையைக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக