Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 23 டிசம்பர், 2021

ரொம்ப நாள் டவுட்... உங்களுக்கு தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------
வாய் விட்டு சிரிங்க...!!
------------------------------------------------

காவலர் : எதுக்கு கோயில்ல இருந்த பிள்ளையார் சிலையை திருடின?
திருடன் : இதுதாங்க ஐயா என் முதல் திருட்டு. அதான், தொழிலுக்கு ஒரு பிள்ளையார் சுழியா இருக்கட்டுமேன்னு.
காவலர் : 😬😬
 ------------------------------------------------
ஆசிரியர் : ஏன்டா 'திரு திரு"ன்னு முழிக்கிற?
மாணவன் : பின்ன, 'திருமதி திருமதி"ன்னா முழிக்க முடியும் சார்?
ஆசிரியர் : 😖😖
 ------------------------------------------------
 இன்றைய கடி...!!
 ------------------------------------------------
 🎉 சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசியில காச கரியாக்குவாங்க!
நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!

😜 ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க. அப்ப,
பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
உங்களுக்கு தெரியுமா?
🐜 எறும்பு ஏப்பம் விடுமா?

🐝 கொசு கொட்டாவி விடுமா?

🐞 கரப்பான் பூச்சிக்கு விக்கல் வருமா?

🦎 பல்லிக்கு தும்மல் வருமா?

🦆 கொக்குக்கு முடி நரைக்குமா?

 ------------------------------------------------
என்னங்க என்று அழைத்தால்...!
 ------------------------------------------------

கல்யாண வீட்டில் 'என்னங்க" என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வா என்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று 'என்னங்க" என்றால்
தேடிய புடவை கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும்போது 'என்னங்க" என்றால்
பூ வாங்க வேண்டும்
என்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று 'என்னங்க" என்றால்
மருத்துவரிடம் என்ன பேச வேண்டும்
என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் 'என்னங்க" என்றால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.

வெளியே பார்த்து 'என்னங்க" என்றால்
அறியாத ஆள் வாசலில்
என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று 'என்னங்க" என்றால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து 'என்னங்க" என்றால்
சாப்பிட வாங்க
என்று அர்த்தம்.

சாப்பிடும்போது 'என்னங்க" என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.

பாத்ரூமில் நின்று 'என்னங்க" என்றால்
பல்லி அடிக்க
என்று அர்த்தம்.

கண்ணாடி முன் நின்று 'என்னங்க" என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்.

நடக்கும்போது 'என்னங்க" என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.

காலமெல்லாம் சொன்னவள் கடைசி மூச்சின்போது 'என்னங்க" என்றால்
என்னையும் அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.

'என்னங்க" என்ற வார்த்தை இல்லை என்றால்
எல்லாம் முடிந்து போனது
என்று தானே அர்த்தம்....?

அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது இவ்வுலகில்!... இவள் இன்றி கணவனுக்கு எதுவுமே இயங்காது வாழ்க்கையில்!..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக