Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 27 டிசம்பர், 2021

Humanzee: சிம்பான்சியையே கர்ப்பமடையச் செய்த சீனா! விஞ்ஞானம்

Humanzee: சிம்பான்சியையே கர்ப்பமடையச் செய்த சீனா! விஞ்ஞானம்

மனிதாபிமானமற்ற அறிவியல் சோதனைகளுக்காக உலகளவில் பிரபலமான நாடு சீனா. தற்போது சீனாவின் அப்படியொரு சோதனை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. சீன விஞ்ஞானிகள் மனிதர்கள் மற்றும் சிம்பன்சிகளின் கலவையிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய உயிரினத்தை உருவாக்க முயன்றனர். இதற்காக பெண் சிம்பன்சியின் உடலில் மனித விந்தணுக்கள் செலுத்தப்பட்டது.

இந்தத் தகவலை சீன ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார். 1960 களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், பெண் சிம்பன்சி கர்ப்பமடைந்தது, ஆனால் சரியான கவனிப்பு இல்லாததால் அது இறந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர் கூறுகிறார். இறக்கும் போது அந்த சிம்பான்சி மூன்று மாத கர்ப்பமாக இருந்தது.

"சீனாவின் இந்தப் பரிசோதனை பலனளித்திருந்தால், அது மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கும்” என்று  அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜி யோங்ஜியாங் கூறுகிறார். ஹ்யூமன்சி (Humanzee) பரிசோதனையில் பங்கேற்ற இரு மருத்துவர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது. ஆனால், கலாச்சாரப் புரட்சி முறியடிக்கப்பட்டபோது, டாக்டர் ஜி பின்னர் "புரட்சியாளர்" என்று முத்திரை குத்தப்பட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.

1967 ஆம் ஆண்டு ஷென்யாங்கில் ஆய்வுக்கூடம் அழிக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டார்கள். அதன்பிறகு, கர்ப்பிணி சிம்பன்சிகளுக்கு போதுமான கவனிப்பு இல்லாததால், அவை இறந்துவிட்டதாக டாக்டர் ஜி யோங்ஜியாங் தெரிவித்தார். 

பெரிய மூளை மற்றும் வாய் கொண்ட ஒரு உயிரினத்தை உருவாக்குவதே திட்டத்தின் (New Species) முதன்மை குறிக்கோள் என்று டாக்டர் ஜி கூறினார். சிம்பன்சிகளின் வாய் மிகவும் குறுகலாக இருப்பதால் மனிதர்களைப் போல் அவற்றால் பேசமுடியாது.  

மனிதனைப் போலவே புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்க சீனா 1960களிலேயே முயற்சித்தது என்று சீன ஊடகத்திடம் டாக்டர் ஜி யோங்ஜியாங் என்ற விஞ்ஞானி 1980களிலேயே தெரிவித்திருந்ததாக, தி சன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த புதிய உயிரினம், விவசாய வேலைகளுக்கும், வண்டி ஓட்டுவதற்கும் மற்றும் விண்வெளி மற்றும் கடல் தளத்தை ஆய்வு செய்வதற்கும் கூட பயன்படுத்தப்படலாம் என்று டாக்டர் ஜி தனது பேட்டியில் கூறியிருந்தார். அவர்கள் ஆபத்தான சுரங்கங்களில் இருந்து அனுப்பப்படலாம் என்றும் அவர் கூறினார்.

ஆராய்ச்சி நோக்கம்
இந்தப் பாணியிலான சோதனைகளை தொடங்குவதற்கான திட்டங்கள் இருப்பதாகக் சைனீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸின் (Chinese Academy of Science) மற்றொரு ஆராய்ச்சியாளர், ஃபிராங்கண்ஸ்டைன்கூறினார். இதற்கு முன்னதாக எப்போதாவது இதுபோன்ற சோதனைகள் நடந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார்..

ஹ்யூமன்சி (Humanzee) என்ற சொல் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இது, மனித-சிம்பன்சி கலப்பினத்தைக் குறிக்கிறது. மனிதர்களும், சிம்பான்சியும் இணைந்து புதிய இனத்தை தோற்றுவிக்க முடியும் என்பது அறிவியல் பூர்வமாக சாத்தியமானது.

மனிதர்களும் குரங்குகளும் "தொடர்புடையவை" என்றும், இரு இனங்களும் இணைந்து குழந்தைகளை ஒன்றாக உருவாக்கக்கூடிய மரபணுக்களைக் கொண்டவை என்ற பரிணாமக் கோட்பாட்டை நிரூபிக்கவும் இந்த ஆராய்ச்சி விரும்பியது.

செம்படை வீரர்களால் வெல்ல முடியாத இனத்தை உருவாக்க உத்தரவு
பல ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவும் இதேபோன்ற சோதனைகளை மேற்கொண்டது. செம்படை வீரர்களின் வெல்ல முடியாத இனத்தை உருவாக்கவேண்டும் என ஜோசப் ஸ்டாலின், பிரபல விஞ்ஞானி இலியா இவனோவ் என்பவருக்கு  உத்தரவிட்டார்.

போர்வீரர்களுக்கு "நெகிழ்ச்சி மற்றும் பசியை எதிர்க்கும் தன்மை இருக்கவேண்டும்" என்று சொன்ன ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், "மிகவும் வலுவாக இருக்க வேண்டும், ஆனால் வளர்ச்சியடையாத மனதுடன்" இருக்க வேண்டும் என்றும் விரும்பினார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக