Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 டிசம்பர், 2021

MLM திட்டம் மூலம் ரூ.1500 கோடி மோசடி.. 10 லட்சம் பேர் ஏமாந்த சோகம்.. என்ன நடந்தது தெரியுமா..?

 இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ்

ஏமாளிகள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், இந்தியாவில் MLM திட்டம் மூலம் மோசடி செய்த பல உதாரணங்கள் இருந்தாலும் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையாமல் தொடர்ந்து இத்தகைய MLM மோசடி திட்டம் மூலம் ஏமாந்து வருகின்றனர். இப்படி 1500 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ்

இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்களை (மக்களை) ஏமாற்றிய நிலையில், இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் ஆகியோரை அமலாக்கத்துறை நேற்று பெங்களூரில் இருந்து கைது செய்துள்ளது.

கச்சிபௌலி காவல் நிலையம்

தெலுங்கானாவில் கச்சிபௌலி காவல் நிலையத்தில் சைபராபாத் போலீஸார் இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் முதலீட்டாளர்களை மோசடி செய்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளது மார்ச் 2021ல் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக ஏற்கனவே 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 20 கோடி ரூபாய் பணம் கொண்ட வங்கி கணக்கையும் முடக்கப்பட்டது

அமலாக்க துறை

இந்த வழக்கை அமலாக்கத் துறை கையில் எடுத்த நிலையில் தற்போது இந்நிறுவன உரிமையாளர்களை அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்விருவரும் முறையற்ற வகையில் MLM திட்டம் மூலம் முதலீட்டாளர்களைச் சேர்ந்து நேரடி விற்பனை பிரிவில் இறங்கியுள்ளது, இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் மார்க்கெட்டி செய்து கமிஷன் குறித்து அதிகப்படியான விளம்பரம் செய்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.

இவர்கள் தான் டார்கெட்

இவர்களின் இலக்கு எல்லாம் குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான பணத்தைச் சேர்க்க வேண்டும் என எண்ணம் கொண்ட மக்களாக இருக்கிறார்கள், இவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி அதிகப்படியானோரைச் சேர்த்து சுமார் 1500 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

1500 கோடி ரூபாய்

2014 முதல் இயங்கி வரும் இந்நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களிடம் பெறும் பதிவு கட்டணம், அவர்களிடம் விற்பனைக்காகக் கொடுக்கப்படும் பொருட்களுக்குக் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் மூலம் சுமார் 1500 கோடி ரூபாய் அளவிலான பணத்தைச் சேர்ந்துள்ளனர்.

MRP விலை

அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் தலைமையில் இயங்கும் இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்கப்படும் பொருட்களின் MRP விலையில் 20 சதவீதத்தில் கொடுக்கிறது என்பதால் முதலீட்டாளர்களுக்கு (மக்கள்) 80 சதவீதம் லாபம் கிடைப்பதாக நம்பி பொருட்களை இந்நிறுவனத்திடம் இருந்து வாங்கி வெளி சந்தையில் விற்பனை செய்கிறார்கள், ஆனால் இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் வழங்கும் பொருட்களுக்கு மதிப்பே இல்லை என்பது தான் உண்மை.

போலி நிறுவனம்

அமலாக்க துறை விசாரணையில் அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் ஆகியோர் 10 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை Indusviva Group கீழ் இருக்கும் சில போலி நிறுவனங்களுக்கும் தங்களது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கும் பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக