
தற்போது உள்ள சில செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது பிடித்த உணவுகளை வாங்கி சாப்பிட UBER EATS, சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற செயலிகளை மக்கள் அதிக பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் முதன் முறையாக விண்வெளியில் ஆன்லைன் உணவு டெலிவரியை மேற்கொண்ட நிறுவனம் என்ற பெருமையைபெற்றுள்ளது Uber Eats நிறுவனம். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை உபெர் நிறுவனம் விண்வெளிக்கே சென்று டெலிவரி செய்துள்ளது. இதற்குவேண்டி ஜப்பானின் ஃபேஷன் உலக பணக்காரர் ஆன யுசாக்கூ மேசவா உடன் உபெர் ஈட்ஸ் கூட்டணி சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக யுசாக்கூ அவர்கள் சோயுஸ் எனும் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதுவும் இது 12 நாட்கள் கொண்ட மிஷன் எனறு கூறப்படுகிறது. அதேபோல் இவர் தான் உபெர் டெலிவரி பாய் ஆக செயல்பட்டுள்ளார்.
அதாவது உபெர் உணவு பார்சலை எடுத்துக்கொண்டு இந்தப் பணக்காரர் டெலிவரி செய்ய விண்வெளிக்கே சென்றுள்ளார். அமெரிக்க உணவு டெலிவரி நிறுவனமான உபெர் ஈட்ஸ் இந்த வரலாற்று நிகழ்வை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் யுசாக்கூ கொண்டு சென்ற உணவு டெலிவரியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் வாங்கிக் கொண்டனர். மேலும் உபெர் ஈட்ஸ் சார்பில் உணவு டெலிவரி பார்சலில் இருந்து ஐட்டங்கள் குறித்து பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்த உணவு பார்சலில் ஃபீப் பவுல், மிசோ, மூங்கில் சிக்கன், பன்றி இறைச்சி போன்ற சில உணவுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வரலாற்று நிகழ்வை பூமியில் வாழும் மக்கள் உடன் கொண்டாட விரும்பி உள்ள உபெர் ஈட்ஸ் SPACEFOOD எனும் கூப்பன் கோட் ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உபெர் எங்கு வேண்டுமானாலும் டெலிவரி செய்யும், இப்போது விண்வெளி உட்பட என்ற விளம்பர பிராச்சாரங்களை
உபெர்
நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதேபோல் உபெர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு
புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
அதேபோல் நாம் ஆர்டர் செய்த உணவுகளை டோர் டெலிவரி செய்தற்கு பல நிறுவனங்கள் உள்ளன. ஆர்டர் செய்த உணவுகளை டோர் டெலிவரி செய்வதற்கு இந்தியாவில் பல நிறுவனங்கள் இருந்தாலும், இவற்றில் முன்னணியில் இருப்பது UBER EATS ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக