
கொரோனா தொற்றுக்குப் பின்பு கிட்டதட்ட 2 வருடம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் அனைத்துத் துறை நிறுவனங்களிலும் Work From Home என்பது மிகவும் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.
இது மட்டும் அல்லாமல் நிறுவனங்கள் புதிதாக ஹைபிரிட் மாடல் மற்றும் நிரந்தர WFH திட்டத்தை அறிவித்து வரும் வேலையில் தொழிலாளர் துறை ஊழியர்களின் சம்பளத்தில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
எந்த ஒரு ஊழியர் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறாரோ, அவரின் சம்பளத்தையும் சம்பள கட்டமைப்பை மாற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க தொழிலாளர் அமைச்சகம் விரைவில் அனுமதி கொடுக்க உள்ளது.
இப்புதிய அனுமதியின் மூலம் நிறுவனங்கள் ஊழியர்களின் HRA அதாவது வீட்டு வாடகை கொடுப்பனவைக் குறைக்க முடியும், இதேவேளையில் கட்டமைப்புப் பொருட்களுக்கான தொகையை அதிகரிக்க முடியும். இது இரண்டும் ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
மேலும் தொழிலாளர் அமைச்சகம் விரைவில் புதிய சர்வீஸ் கண்டிஷன்ஸ் அடங்கிய ஆணையை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இப்புதிய அரடு ஆணையில் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காகச் செலவுகள் அடிப்படையில் சம்பள கட்டமைப்பை மாற்றவும் உள்ளதாகத் தெரிகிறது.
ஊழியர்கள் நன்மைஇதில் குறிப்பாக மின்சாரம், வைபை, இதர இன்பரா செலவுகளையும் சேர்க்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் நிறுவனத்திற்காகக் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கக் கூடாது, அப்படி இருந்தாலும் அந்தச் செலவுகளை நிறுவனமே ஏற்கும் வண்ணம் சம்பள கட்டமைப்பை மாற்றி அமைக்க நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
Cost of Living பிரச்சனைஇதேபோல் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் தனது வீட்டை 2ஆம் அல்லது 3ஆம் தர நகரங்களுக்கு மாற்றினால் Cost of Living பெரிய அளவில் குறையும், அந்த மாற்றத்தை சம்பளத்திலும் ஏற்பட வேண்டும் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் முக்கியமான பணியாக உள்ளது.
இப்படித் தொழிலாளர் அமைச்சகம் அனைத்துச் சாதகபாதகங்களை ஆய்வு செய்து ஊழியர்கள் மற்றும் நிறுவனத்திற்கு ஏற்ற வகையில் புதிய மாற்றங்கள் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்கள் வீட்டில் இருந்து முழுநேரம் பணியாற்றினால் HRA, professional tax, லேபர் வெல்பர் பண்ட், இண்டர்நெட், மின்சாரம் எனப் பல விதத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் முக்கியமாக HRA குறைக்கப்பட்டால் ஊழியர்கள் அதிகப்படியான வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும், இதை மத்திய அரசு எப்படி ஈடுகட்டும் என்பது தான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக