Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஜனவரி, 2022

ஒன்றரை வயசு குழந்தை 1.4 லட்சத்திற்கு ஆன்லைன் ஆர்டர் செய்த சம்பவம்.. என்ன ஆர்டர் செய்தார் தெரியுமா?

 

இணைய இணைப்புடன் உங்கள் குழந்தை கைகளில் ஸ்மார்ட்போன் கிடைச்சா என்னாகும் தெரியுமா?மொபைல் சாதனங்கள் மற்றும் கேஜெட்டுகளை குழந்தைகளிடமிருந்து ஏன் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்கள் குழந்தைகளை நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டியதன் கடமைக்குக் கரணம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்த முறைகளை நீங்கள் ஏன் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதற்கான உதாரணம் தான் இந்த பதிவு.
 
இணைய இணைப்புடன் உங்கள் குழந்தை கைகளில் ஸ்மார்ட்போன் கிடைச்சா என்னாகும் தெரியுமா?

இது உங்களுடைய சாதனம் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, உங்கள் பணத்தையும் பாதுகாப்பையும் பாதுகாப்பதற்காக என்று தெரிந்துகொள்ளுங்கள். குழந்தையின் கைகளில் உள்ள மொபைல் சாதனம் அல்லது இணையம் இயக்கப்பட்ட வேறு ஏதேனும் சாதனம் சிக்கினால், இது உங்களால் மாற்ற முடியாத பல விஷயங்களில் சிக்க வைப்பதற்கு வழிவகுக்கும் என்பதால் இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள். வல்லுநர்கள் குழந்தைகளின் கைகளில் இணையம் இணைக்கப்பட்ட சாதனங்கள் கிடைக்காமல் இருக்க பரிந்துரைக்கின்றனர்.

உங்கள் மொபைல் சாதனம் ஏன் எப்போதும் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும்?

குழந்தைகள் உள்ள வீட்டில் உங்கள் மொபைல் சாதனம் ஏன் எப்போதும் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது உங்கள் குழந்தைகளுக்கு எட்டாதவாறு இந்த சாதனைகளை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு நியூ ஜெர்சியில் நடந்த இந்த சமீபத்திய வழக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 22 மாதங்களே ஆன அயன்ஷ் குமார் என்ற குழந்தை இன்னும் டயப்பரில் தான் வளம் வருகிறார். ஆனால், இந்த குறுநடை போடும் குழந்தை ஆன்லைனில் செய்த வேலையைக் கேட்டால் வாய் பிளந்துவிடுவீர்கள்.

ஒன்றரை வயசு குழந்தை செய்கிற வேலையா இது.. 1.4 லட்சத்திற்கு ஆன்லைனில் ஷாப்பிங்கா?

இன்னும் சரியாக எட்டு வைத்து நடக்கத் தெரியாத இந்த குழந்தை ஆன்லைனில் $2,000 டாலர் மதிப்பிலான மரச்சாமான்களை பெற்றோருக்குத் தெரியாமல் ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்த பர்னிச்சரின் மதிப்பு இந்திய மதிப்பின் படி சுமார் ரூ 1.4 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ 1.4 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்களை இணையத்தில் இருந்து ஒரு குழந்தை ஆர்டர் செய்தது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள், வேறு வழியே இல்லை இது தான் உண்மையில் நடந்துள்ளது.

அம்மாவுக்காக வேலையை மிச்சம் செய்து பணத்தை வாரி இறைத்த குழந்தை

இந்த வேலையை அயன்ஷ் குமார் பெற்றோரின் கவனிப்பு இல்லாத நேரத்தில் செய்திருக்கிறார். அவர் என்ன ஆர்வத்தில் இதைச் செய்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், அயன்ஷின் தாய் மது, தனது போனில் வால்மார்ட்டின் இணையதளத்தை உலாவவிட்டு, தனது ஷாப்பிங் கார்ட்டில் நிறையப் பொருட்களை ஆட் செய்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் இருந்து சில மரச்சாமான்களை தேர்வு செய்து வாங்குவதற்காக மது திட்டமிட்டிருக்கிறார். ஆனால், இந்த திட்டம் அயன்ஷ் குமாரால் வேறு விதமாக மாறிவிட்டது.

இவர் இதைச் செய்தார் என்று நம்புவது மிகவும் கடினம்

அயன்ஷ் குமாரின் தாய் மது புதிய வீட்டிற்கு சில பொருட்களை மட்டுமே வாங்க நினைத்திருந்தார். ஆனால், அவரது மகனுக்கு நன்றி, கார்ட்டில் உள்ள அனைத்து பொருட்களும் ஒரு பெரிய ஆன்லைன் கொள்முதல் மூலம் வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அயன்ஷின் தந்தை பிரமோத் குமார் கூறுகையில், "அவர் இதைச் செய்தார் என்று நம்புவது மிகவும் கடினம், ஆனால் அதுதான் நடந்தது" என்று கூறியுள்ளார். புதிய தளபாடங்கள் பெட்டிக்குப் பெட்டியாக அவர்களின் முகவரிக்கு வரத் தொடங்கியபோது பெற்றோர்கள் ஆச்சரியமடைந்தனர்.

வீட்டிற்குள் பொருந்தாத அளவிற்கு பெரிய பொருட்களா?
வீட்டிற்குள் பொருந்தாத அளவிற்கு பெரிய பொருட்களா?

சில பொட்டலங்கள் மிகவும் பெரியதாக இருந்தன, அவை கதவு வழியாக வீட்டிற்கும் கூட நுழையவில்லை, இன்னும் சில பொருட்கள் அவர்களின் வீட்டிற்குள் பொருந்தாத அளவிற்கு பெரியதாகவும் இருந்துள்ளது. மது தனது வால்மார்ட் கணக்கைச் சரிபார்த்தபோது, ​​அவரது மகன் நாற்காலிகள், பூ ஸ்டாண்ட்கள் மற்றும் அவர்களுக்குத் தேவையில்லாத பல பொருட்களை ஆர்டர் செய்திருப்பதைக் கண்டுபிடித்தார். "அயன்ஷ் குமார் ரொம்ப குட்டி, ரொம்ப அழகா இருக்கான், இதெல்லாம் ஆர்டர் பண்ணுனான்னு யோசித்து சிரிச்சோம்" என்கிறார் அயன்ஷ் குமாரின் தாய்.

இனி கடவுக்குறியீடுகள் மற்றும் முக அங்கீகாரம் பயன்படுத்த முடிவு

NBC அறிக்கையின்படி, இந்த ஆர்வமுள்ள குழந்தை தனது பெற்றோர் மற்றும் மூத்த உடன்பிறப்புகளை உன்னிப்பாகக் கவனித்து இந்த செயல்பாட்டில் களமிறங்கியுள்ளது என்று கூறியுள்ளது. அயன்ஷ் குமாரின் தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் அனைவரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ததை அயன்ஷ் குமார் உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார். அவர்கள் செய்த அதே விஷயங்களை அயன்ஷ் குமார் தனது தாயின் தொலைப்பேசியில் பயன்படுத்தியிருக்கிறார். இங்கிருந்து இனி இவர்கள் தங்கள் சாதனங்களில் கடவுக்குறியீடுகள் மற்றும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்று பிரமோத் கூறியுள்ளார்.

பெற்றோர்களின் கவனிப்பு இனியாவது குழந்தைகள் மேல் உன்னிப்பாக இருக்கட்டும்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பெற்றோர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வளர்க்கின்றனர். அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான பெற்றோர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலையைச் சந்தித்ததால், அனைவரும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருந்த நேரங்களே அதிகம். இதனால் குழந்தைகளின் கண்களுக்கு ஸ்மார்ட்போன் என்ற பொருள் முக்கியமான ஈர்ப்பை உருவாக்கிவிட்டது. உங்கள் குழந்தையும் உங்கள் ஸ்மார்ட்போன் மீது ஆர்வமாக இருக்கிறது என்றால், உடனே அதே லாக் செய்து வைத்து பயன்படுத்தத் துவங்குங்கள். பெற்றோர்களின் கவனிப்பு இல்லாத நேரத்தில் இது போன்ற சிக்கலைச் சந்திக்க விரும்பாதவர்கள், குழந்தைகளின் மீது உன்னிப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக