Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஜனவரி, 2022

இந்த வழி தெரிந்திருந்தால் நீங்கள் மற்றொரு நபரின் ரயில் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்? எப்படி தெரியுமா?

மக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட IRCTC சேவை

இந்திய நாட்டின் போக்குவரத்து சேவைகளில் மிக முக்கியமான சேவைகளில் ஒன்றாக நமது இந்திய ரயில்வே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே, இந்தியாவில் அதன் சேவையை முதன் முதலில் ஏப்ரல் 16 ஆம் தேதி 1853 ஆம் ஆண்டில் துவங்கியது. கிட்டத்தட்ட நமது உள் நாட்டில் இந்திய ரயில்வே சுமார் 169 ஆண்டுகளாக மக்களுக்கு அதன் சேவையை வழங்கி வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் தேவையை அறிந்து பூர்த்தி செய்து வரும் இந்திய ரயில்வே, தனது பயணிகள் வாங்கிய டிக்கெட்டுகளில் மற்றவர்களையும் பயணிக்க அனுமதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட IRCTC சேவை

இந்திய ரயில்வே IRCTC சேவையை கடந்த 1999 ஆண்டில் தொடங்கியது. அதற்கு பின்னர், 2002 ஆம் ஆண்டில் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய IRCTC தொடங்கியது. இதற்கு பின்னர் மக்கள் நேரடியாக ரயில் நிலையங்களில் உள்ள ரிசர்வேஷன் கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், ஆன்லைன் மூலம் எளிதாக டிக்கெட்களை வாங்கி பயன்பெற முடிந்தது. இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். இது சுமார் 20,000 க்கும் மேற்பட்ட ரயில்கள் 811.6 கோடி பயணிகளையும் ஒவ்வொரு ஆண்டும் 110.6 கோடி டன் சரக்குகளை கொண்டு செல்கின்றது.

உங்கள் பெயர் அச்சிடப்பட்ட டிக்கெட்டில் வேறு ஒருவர் பயணிக்க முடியுமா?

சரி, இப்போது நீங்கள் முன்பதிவு செய்யும் டிக்கெட்களில் உங்களுடைய பெயர் மற்றும் உங்களுடன் பயணம் செய்யும் நபர்களின் பெயர்களை இந்திய ரயில்வே அச்சிட்டு வழங்குகிறது. ரயில் பெட்டிகள் மற்றும் சார்ட்களில் கூட, எந்த இருக்கையில் எந்த பயணி பயணிக்கிறார் என்ற தகவல்கள் வரை இப்படி தான் அமைக்கப்படுகிறது. இப்படிப் பெயரிடப்பட்ட உங்களுடைய டிக்கெட்களில் இறுதி நேரத்தில் உங்களுக்குப் பதிலாக உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபர் பயணிக்க முடியுமா என்று கேட்டால், முடியும் என்கிறது இந்திய ரயில்வேவின் விதிகள். சில நிபந்தனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் இதை நீங்கள் செய்ய முடியும்.

சரியான நேரத்தில் உங்களால் பயணம் செய்ய முடியவில்லையா? அப்போது என்ன செய்வது?

இந்த வசதி பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த பதிவை இறுதி வரை தொடர்ந்து கவனமாகப் படித்துப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் உறுதி செய்யப்பட்ட ரயில் முன்பதிவு டிக்கெட் இருந்து, எதோ ஒரு சில காரணங்களால் உங்களால் அந்நேரத்தில் பயணம் செய்ய முடியவில்லை என்றால், உங்கள் டிக்கெட் வீண் போகாத படி பயன்படுத்திக்கொள்ள மற்றொரு வழி நம்மிடம் உள்ளது. காரணம், இந்த டிக்கெட்டுகளை உங்கள் குடும்பத்தில் உள்ள எவருக்கும் அல்லது வேறு எந்த நபருக்கும் நீங்கள் மாற்றம் செய்துகொள்ளலாம். அதற்கான அனுமதியை இந்திய ரயில்வே உங்களுக்கு வழங்குகிறது.

ரயில் பயணிகளுக்கான சிறப்பு வசதி

இந்த சிறப்பு வசதியை இந்திய ரயில்வே நீண்ட காலமாக வழங்கி வருகிறது. ஆனால், பெரும்பாலானோர் இந்த வசதி பற்றி அறிந்திருக்கவில்லை என்பதனால் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். சரி, இந்திய ரயில்வேவின் இந்த சிறப்பு வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். பெரும்பாலானோர் பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின், பயணிக்க முடியாத சூழ்நிலையில், அந்த ரயில் பயணச்சீட்டை ரத்து செய்துவிட்டு, மற்றவருக்காக புதிய பயணச்சீட்டு எடுக்க வேண்டிய நிலையை ரயில்வே பயணிகள் அடிக்கடி சந்திக்கின்றனர்.

உங்கள் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுக்கலாமா?

ஆனால், இறுதி நேரத்தில் இப்படிச் செய்யும் போது கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம். அதனால்தான், பயணிகளுக்கு இந்த சிறப்பு வசதியை ரயில்வே வழங்கியுள்ளது. இந்த வசதி நீண்ட காலமாக இருந்து வருகிறது, ஆனால் மக்களுக்கு இது பற்றி மிகவும் குறைவாகவே தெரியும். ரயில்வேவின் இந்த வசதியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம். ஒரு பயணி தனது உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி போன்ற அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மாற்றம் செய்துகொள்ளலாம்.

24 மணி நேரத்திற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட வேண்டிய கோரிக்கை

இந்த மாற்றத்தை மேற்கொள்வதற்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், பயணிகள் மாற்றுப் பெயருக்கான கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, பயணச்சீட்டில் பயணிகளின் பெயர் துண்டிக்கப்பட்டு, யார் பயணிக்க இருக்கிறார்களோ அவர்களின் பெயரில் டிக்கெட்டில் மாற்றப்பட்டு, அந்த நபர் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார். பயணி ஒரு அரசு ஊழியராக இருந்து தனது கடமைக்காகச் செல்கிறார் என்றால், அவர் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் இந்த கோரிக்கையைக் கோரலாம்.

இவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்

இந்த டிக்கெட் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறதோ அந்த நபரின் பெயருக்கு மாற்றப்படும். கோரிக்கை வைக்கப்படும் காரணத்தையும் நாம் கூறவேண்டும். திருமணத்திற்குச் செல்பவர்களுக்கு இது போன்ற நிலை வந்தால், திருமண ஏற்பாடு செய்பவர்கள் 48 மணி நேரத்திற்கு முன், தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதியை ஆன்லைனிலும் பெறலாம். இந்த வசதி என்சிசி கேடட்களுக்கும் கிடைக்கும். இந்திய ரயில்வேவின் விதிப் படி, உங்கள் டிக்கெட்டுகளை மாற்றம் செய்வதற்கான அனுமதி ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய ரயில் டிக்கெட்டை எப்படி மாற்றுவது?
  • அதாவது, ஒரு பயணி தனது பயண டிக்கெட்டை ஒரு முறை மட்டுமே வேறு நபருக்கு மாற்றி அமைக்க முடியும். அதை மறுமுறை மாற்றம் செய்ய முடியாது.
  • உங்கள் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு எப்படி மாற்றுவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
  • டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • அருகிலுள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டரைப் பார்வையிடவும்.
இந்த அடையாள ஆவணங்களை எடுத்து செல்லுங்கள் 
 
டிக்கெட் யாருடைய பெயரில் மாற்றப்பட வேண்டுமோ அந்த நபரின் ஆதார் அல்லது வாக்கு அடையாள அட்டை போன்ற அவரது அடையாளச் சான்று எடுத்துச் செல்ல வேண்டும்.
 
கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.

அவ்வளவு தான், உங்களுடைய டிக்கெட்டை கேன்சல் செய்யாமல், வெறும் பெயர் மாற்றத்தை மட்டும் மேற்கொண்டு உங்களுடைய அதே டிக்கெட்டில் வேறு ஒருவரை இனி உங்களால் பயணம் செய்ய அனுமதிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக