Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஜனவரி, 2022

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது ரிலையன்ஸ் ஜியோ.! எதில் தெரியுமா?

மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து அருமையான திட்டங்கள் மற்றும் புதிய சாதனங்களையும் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. குறிப்பாக 2 ஆண்டுகளே
ஆன நிலையில் அதிக வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது இந்நிறுவனம். மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட தகவலின்படி கடந்த அக்டோபரில் 41.60 லட்சமாக இருந்தஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நவம்பரில் 43.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 47.20 லட்சமாக இருந்தது. இது நவம்பர் மாதத்தில்42 லட்சமாக சரிந்துவிட்டது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 40 லட்சமாகஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் வசமிருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 86 லட்சமாகும். ஆனால் 2 ஆண்டுகளில்அதாவது 2021-ல் வாடிக்கையாளர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வயர் மூலமான பிராட்பேண்ட் சேவை 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே கூறியபடி ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 40 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருந்தது. இதே அளவில் இது வளரும்பட்சத்தில் விரைவிலேயே பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஏர்டெல் விஞ்சிவிடும் என்று கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக